பணிந்தார் பிரதமர்: ராஜினாமா முடிவை ஒத்திவைத்தார் மம்தா
Subscribe to Oneindia Tamil
கல்கத்தா:
சமீபத்தில் உயர்த்தப்பட்ட மண்ணெண்ணெய், சமையல் காஸ் ஆகியவற்றின் விலையைக் குறைக்க பிரதமர்வாஜ்பாய் ஒப்புக் கொண்டதையடுத்து தனது ராஜினாமா முடிவை மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜிவெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைத்துள்ளார்.
இத்தகவலை மம்தா பானர்ஜியே நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், 6ம் தேதி மத்திய அமைச்சரவைகூடி இது குறித்து விவாதிக்க உள்ளது. அதுவரை பொறுத்திருப்போம். அதில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்துஅடுத்த என்ன செய்வது என்று முடிவு செய்வேன் என்றார்.
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரானமம்தா பானர்ஜியும், அவரது கட்சியைச் சேர்ந்த அஜித் பாஞ்சாவும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினர்.மத்தியில் பாரதீய கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து வரும் மம்தாவிடம் மொத்தம் 9 எம்.பிக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications