தமிழகத்தில் மேலும் ஒரு சாப்ட்வேர் பூங்கா
கேள்வி - பதில்
கே: தி.மு.க.வை தோற்கடிக்க இந்து முன்னணி முடிவு செய்துள்ளது என்கிறாரே இராம. கோபாலன். இது பற்றி ...?
ப: அவசரப்படக்கூடாது. இந்து முன்னணியை சமாதானம் செய்ய முதல்வர் முனைய மாட்டாரா? அல்லது இந்து முன்னணிதான் பொறுமையைக்கடைப்பிடிக்காதா?
தி.மு.க. திருந்தி விட்டது என்றோ, இன்னும் ஒரு வாய்ப்பு தந்து பார்க்கிறோம் என்றோ சொல்ல எத்தனை நேரமாகும்?
கே: தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடைவெளி எது?
ப: காலம். நேரம்.
கே: தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி பா.ஜ.க. தான் என்கிறாரே இல. கணேசன்? சரியா?
ப: அப்படியானால் முதலாவது பெரிய கட்சி எது? ராஜாராம், எஸ்.டி.எஸ். போன்றவர்கள் ஆரம்பித்திருக்கும் கட்சியா?
கே: ஒரே வாரத்தில் ஜெயலலிதா, கடவுளை மறுக்கும் பெரியார் விழாவுக்கும் தலைமை தாங்கி , கும்பகோணம் சென்று அங்கு ஒரு காளி கோயிலில்யாகத்தையும் நடத்தி முடிதுள்ளாரே! இந்தத் துணிவு பற்றி ...?
ப: இது நல்ல துணிவுதான். பெரியார் விழாவும் கொண்டாடி, ஜெயலலிதா தலைமையையும் போற்றுகிற வீரமணியின் துணிவுக்கு நிகரான துணிவுதான் இது.
கே: பெரியார் ஒரு உணவு விடுதி மாதிரி, அங்கு வருபவர்கள் எல்லாப் பண்டங்களையும் சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு இனிப்புபிடிக்காது; சிலருக்கு எண்ணெய்ப் பலகாரம் பிடிக்காது என்று வீரமணி கூறியுள்ளதைப் பற்றி...?
ப: எதைச் சாப்பிட்டாலும் பேதி ஆகிற உணவு விடுதிகளும் உண்டல்லவா?
கே: சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு, இந்தியாவின் சார்பில் அணிகள் எதையும் அனுப்பாமலிருந்தால், கொஞ்சமாவது கவுரவமாகஇருக்குமே...?
ப: நம்மை மாதிரி சோப்ளாங்கி நாடுகளை திருப்தி செய்யத்தான் ஜெயிப்பது முக்கியமில்லை; பங்கேற்பதுதான் முக்கியம்; அதுதான் இந்த பந்தயங்களின் சிறப்புஎன்று கூறப்படுகிறதே! அதை நினைத்து கவுரவம் கிட்டியதாக திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
கே: விதிமுறைகளை மீறி மாணவர்களை சேர்க்கும் கல்வி நிறுவனங்கள் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதுபற்றி...?
ப: எல்லா கல்வி நிறுவனங்களுமே மாணவர்களுக்கு நஷ்ட ஈடு அளிப்பதுதான் நியாயமாக இருக்கும். கல்வி கற்றுள்ள மாணவர்களைப் பார்த்தால்இப்படித்தான் தோன்றுகிறது.
கே: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும், இனி பஸ் கட்டணம் உயராது - என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே ...? அதைப் பற்றி உங்கள்கருத்து ...?
ப: வர இருக்கிற தேர்தலுக்கு நன்றி.
கே: சந்தனக் கடத்தல் வீரப்பன் அண்ட் கோ-வினர், நடிகர் ராஜ்குமாரை இவ்வளவு நாட்களாக காட்டில் வைத்திருப்பார்கள் என்று நினைத்திருப்பீர்களா?ப: இல்லை. பத்து, பதினைந்து நாட்களுக்குள்ளாகவே அவர்கள் வீரப்பனால் விடுவிக்கப்படுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன்.
கே: பாப்பாத்தி என்று தன்னைச் சொல்லிக் கொண்ட ஜெயலலிதாவுக்கு. பெரியார் விழாவை நடத்த அருகதை இல்லை - என்று வைகோ கூறுவதைப்பற்றி ...?
ப: தமிழனையும், தமிழையும் கூடத்தான் பெரியார் கண்டபடி ஏசினார். ஆனால் தன்னைத் தமிழன் என்று கூறிக் கொள்பவர்கள், பெரியார் விழா கொண்டாடஅருகதை படைத்தவர்களாகக் கருதப்படவில்லையா? அது போல்தான் இதுவும்.
கே: ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். பங்கு கொடுத்தாலும் ஏற்க மாட்டோம்- என்று அறிவித்துள்ள டாக்டர் ராமதாஸின் பெருந்தன்மைகுறித்து ...?
ப: இதை அவர் யாருக்கு சொல்கிறார் என்பது தெரியவில்லையே? கருணாநிதிக்கா, ஜெயலலிதாவுக்கா? தகவல் யாருக்கு?
கே: அன்றைய மன்னர் ஆட்சி; இன்றைய மக்கள் ஆட்சி - ஒப்பிடுக!
ப: ஆட்சி செய்பவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் - என்பது அடிப்படை தத்துவம்.
மன்னர் ஆட்சியில் மன்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் - என்று எதிர்பார்க்கப்பட்டது.
மக்கள் ஆட்சியில் - மக்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே: மேற்கு வங்க நிலவரத்தை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது - என்று உள்துறை அமைச்சர் அத்வானி மீண்டும்எச்சரித்துள்ளது பற்றி ...?
ப: ஆமாம். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அவ்வப்போது மோசம், ரொம்ப மோசம் என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.
கே: பெரியார் என் கனவில் வந்தார் என்று பகுத்தறிவுவாதி கருணாநிதி கூறியுள்ளாரே?
ப: பகுத்தறிவுவாதிகளுக்குக் கெட்ட கனவு வரக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்ன?
கே: எனக்கு இரண்டு சந்தேகம். தீர்த்து வைக்கவும். ஒன்று - பெரியாரின் கொள்கைகளை இப்போது வீரமணி பின்பற்றுகிறாரா? இரண்டு -காமராஜின் கொள்கைகளை இப்போது மூப்பனார் பின்பற்றுகிறாரே?
ப: ஓ! பின்பற்றுகிறார்களே! முட்டாள்கள்தான் தனக்குத் தேவை என்று பெரியார் சொன்னார் - வீரமணியும் அப்படி நினைத்துத்தான் செயல்படுகிறார்;இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் என்று காமராஜ் சொன்னார் - அதனால் இரண்டு கழகங்களில் எதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டாலும் ஒரு வித்தியாசமும் இல்லை என்று நினைத்து மூப்பனார் செயல்படுகிறார்.
கே: ராஜ்குமாரின் உதவியாளர் நாகப்பா, வீரப்பன் பிடியிலிருந்து தப்பி வந்த செய்தி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: இந்த நாகப்பா விஷயம் மட்டுமல்ல - மொத்தமாகவே வீரப்பன் விவகாரத்தில எது நிஜம், எது பொய் என்பதே புரியவில்லை.
இரு மாநில முதல்வர்கள் கூட உண்மையை கூறவில்லை என்ற சந்தேகம்தான் பலமாக எழுகிறது. தமிழக முதல்வரோ, இந்த ஆள் ஏன் தப்பித்துவந்தார்? என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
அவருடைய இஷ்டத்திற்கு விட்டால், இந்த நாகப்பாவை கோபால் வசம் ஒப்படைத்து, வீரப்பனிடம் மீண்டும் அனுப்பி வைத்து விடுவார் போலிருக்கிறது.
அந்த அளவுக்கு வருத்தப்பட்டிருக்கிறார்! பொறுமை இழந்து விட்டாரே! இப்படி செய்து விட்டாரே! என்றெல்லாம் முதல்வர் அங்கலாய்த்திருக்கிறார்.
அந்த நாகப்பா சொல்வதிலும் எவ்வளவு சதவீதம் ரீல் என்பது புரியவில்லை. எல்லாமே மர்மமாக இருக்கிறது. பலவித சந்தேகங்கள் வருகின்றன.எல்லோருமாகச் சேர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருகிறார்கள் - என்பது மட்டும்தான் புரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications