ராணுவத் தாக்குதலில் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர் சாவு
ஜம்மு:
ஹிஜ்புல் முஜாஹுதின் தீவிரவாதிகள் அமைப்பின் தலைவர்களில் முக்கியமானவரானஅபு பிலால் என்பவரைக் கொன்றதின் மூலம் இந்திய ராணுவம் முக்கிய வெற்றியைப்பெற்றுள்ளது.
ஜம்மூ - காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள்,ஹிஜ்புல் மூஜாஹுதின் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படும் அபுபிலாலையும் மேலும் மூவரையும் ஜம்முவிலிருந்து 230 கிலோ மீட்டர் வடக்கேஅமைந்துள்ள பிர் பன்சால் பகுதியின் சிரன்கோட் என்ற இடத்திற்கு அருகே உள்ளபாட்டான் கிராமத்தில் சுட்டுக் கொன்றனர்.
புதன்கிழமை இரவு ரஜோரியில் அமைந்துள்ள ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின்,ரோமியோ ஃபோர்ஸ் என்ற பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பிர் பன்சால் பகுதியில்பிலாலையும் அவரது கும்பலையும் மலை சூழ்ந்தகுதியில் சுற்றி வளைத்தனர்.
அதைத் தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே 3 மணிநேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் அபு பிலாலும் அவரதுகூட்டாளிகளும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட நால்வரும் பல காலமாக தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள். பிலால் ஒருவருடகாலமாக பிர் பன்சால் பகுதியில் தீவிரவாத நடவடிக்கையில்ஈடுபட்டுவந்தார்.இந்திய ராணுவ முகாம் மீதும் புறக்காவல் படை முகாம் பல முறைதாக்குதல் நடத்தப்பட்டது அதை நடத்தியது பிலால்தான்.
ராணுவ வீரர்கள் கடந்த 15 நாட்களில் பூஞ்ச் எல்லைப் பகுதியில் 60 தீவிரவாதிகளைக்கொன்றுள்ளனர். குறுகிய காலத்தில் இந்த அளவு திவிரவாதிகள் கொல்லப்பட்டதுஇதுவே முதல் முறை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications