5 கிலோ ஆர்.டி.எக்ஸுடன் முக்கிய தீவிரவாதி கைது - பெரிய சதித் திட்டம் முறியடிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன்தீவிரவாத இயக்கத்தின் உயர் கமாண்டர் டெல்லியில் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 5.4 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள்பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளின் பெரிய சதித் திட்டம்முறியடிக்கப்பட்டதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.

இது பற்றி டெல்லி போலீஸார் கூறியதாவது:

டெல்லியில் ராம்லீலா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் விழாவின்போதுடெல்லியில் பல பகுதிகளில் குண்டு வெடிப்புகளை நடத்த ஹிஸ்புல் முஜாஹிதீன்தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது.

இந் நிலையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் உயர் கமாண்டராக இருக்கும்பிலால் அஷ்ரப் எனப்படும் லதித் மொகம்மது பட் டெல்லிக்குள் வெடிபொருட்களுடன்நுழைந்திருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து டெல்லி மாநகரம் முழுவதும் கண்காணிப்பும், தேடுதல் வேட்டையும்துரிதப்படுத்தப்பட்டது. அப்போது, ஜும்மா மசூதி அருகே தனது கூட்டாளியைச்சந்திக்க மோட்டார் சைக்கிளில் பிலால் அஷ்ரப் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே, சம்பவ இடத்துக்குப் போலீஸார் மாறுவேடத்தில் சென்று காத்திருந்தனர்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பிலால் அஷ்ரப்பை போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

அவரிடமிருந்த 5.4 கிலோ பிளாஸ்டிக் ஆர்.டி.எதஸ் வெடிபொருள் பறிமுதல்செய்யப்பட்டது. இந்த வெடிபொருளை வைத்து டெல்லி மாநகரில் பல பகுதியில்குண்டு வெடிப்புகளை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில்தெரியவந்தது.

பிலால் அஷ்ரப் கைது செய்யப்பட்டதன் மூலம் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளின்பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது என்று டெல்லி போலீஸ் கமிஷனர் அஜய் ராஜ்சர்மா தெரிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+