கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சாரயம் விற்று வந்து இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம், பெரியகள்ளிப் பட்டியைச் சேர்ந்தவர் அம்மாசி. இவர் அரிசனக் காலனியில் தொடர்ந்து கள்ளச்சாரயம் விற்று வந்தார். இவர் பலமுறை சிறைக்குச் சென்றும், அபராதம் கட்டியும் தொடர்ந்து தனது "தொழிலை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
இவரைத் தடுப்பது குறித்து ஆலோசனை செய்த போலீசார், இவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டருக்குப் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அம்மாசி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
இதே போன்று, சுல்லிமேடு பகுதியில் கள்ளச்சாராயம், விற்ற குமார் என்பவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் கருத்தையாஉத்தரவிட்டார்.
இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications