H-1B
வாஷிங்டன்:
அமெரிக்க நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்ட எச்1-பி விசா அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் இந்த மசோதாவில் விரைவில் கையெழுத்திடுவார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விசா சம்பந்தமான மசோதா செவ்வாய்க்கிழமையன்று செனேட்டில் 96 ஆதரவுடன் வெற்றி பெற்றது. எதிராக ஒருவர் மட்டும் வாக்களித்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலமும் வெற்றி பெற்றது,
பிப்ரவரி மாதம் அனுமதிக்கப்பட்ட எச்-1பி விசாவுக்கு மனு செய்தவர்களில் 43 சதவிகிதம் பேர் இந்தியர்கள். சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் 9.9 சதவிகிதம் பேர், கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் 3.9 சதவிகிதம் பேர், பிரிட்டன் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலா 3.2 சதவிகிதம் பேர்.
எச்-1 பி விசா மூலம் அமெரிக்கா வருபவர்களில் 54 சதவீதம் சாப்ட்வேர் நிபுணர்கள் தான். இதுவரை எச்-1பி விசா பெற்றவர்களில் 56 சதவிகிதம் பேர் இளநிலை பட்டம் பெற்றவர்கள், 31 சதவிகிதம் பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.8 சதவிதம் பேர் டாக்டர் பட்டம் பெற்றவர்கள்.
எச்-1 பி விசா சிறப்பான தகுதி பெற்ற அழகுக்கலை நிபுணர்களுக்கும் வழங்கப்படுகிறது.
எச்-1பி விசா திட்டம் 1950-ல் துவங்கியது. 1990-ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. செப்டம்பர் 10-ம் தேதி வரை 1,15,000 பேர் எச்-1பி விசா பெற்றிருக்கிறார்கள்.
பழைய சட்டப்படிஅக்டோபர் 1-ம் தேதி முதல் துவங்கும் நிதியாண்டில் 107,500 பேருக்கு எச்-1 பி விசாக்கள் வழங்கப்படும் என்றும், 2002-ன் நிதியாண்டில் 65,000 பேருக்கு மட்டுமே எச்-1பி விசா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய சட்டப்படி செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன் 2000-ம் ஆண்டிற்காக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால் அப்போதுதான் 2001-ம் ஆண்டிற்கு 195,000 பேருக்கு விசா அளிக்க முடியும்.
ஐ.ஏ.என்.எஸ்.
- H1B விசா: இனி 6 ஆண்டுகளுக்குப் பெறலாம்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications