பளுதூக்குதலுக்கு பயிற்சி அகாதெமி அமைக்கிறார் கர்னம் மல்லேஸ்வரி
ஃபரீதாபாத் (ஹரியானா):
பளுதூக்குதலில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒருஅகாதெமியை அமைக்க உள்ளதாக கர்னம் மல்லேஸ்வரி கூறினார்.
சிட்னியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில்வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் கர்னம் மல்லேஸ்வரி.
சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்த ஒரே பதக்கம் என்பதுடன், ஒலிம்பிக்போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் அவர்படைத்தார்.
பளுதூக்குதலில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒருஅகாதெமியை அமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கிராமப்பகுதிகளில் வசிக்கும் பளுதூக்குதலில்ஆர்வம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பேன் என்றார் அவர்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 70 லட்சத்துக்கும்அதிகமான பரிசுப் பணத்தை இதற்காகச் செலவிடுவேன். நிதி போதவில்லை என்றுதொழில் நிறுவனங்களிடன் நிதி உதவி பெற்று அகாதெமி அமைப்பேன்.
நம் நாட்டில் விளையாட்டை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ளமுயற்சிகளும், திட்டங்களும் போதுமானதாக இல்லை. இன்னும் அதிக ஈடுபாட்டைக்காட்டவேண்டும்.
விளையாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையான அளவில்பயன்படுத்தப்படவேண்டும். கிராமப்பகுதிகளில் விளையாட்டு முகாம்கள் நடத்திதகுதியானவர்களையும், திறமையானவர்களையும் தேர்வு செய்யவேண்டும்.
சமீப காலமாக விளையாட்டுத் துறையில் சீனா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்தநாட்டில் 6 வயதிலிருந்தே விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கி விடுகின்றனர்.
இந்தியாவிலும் அத்தகைய திறமையானவர்கள் இருக்கின்றனர். இந்திய அரசு சீரியமுயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் விளையாட்டில் நாமும் பிரகாசிக்கமுடியும்என்றார் கர்னம் மல்லேஸ்வரி.
சிட்னி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகஅறிவித்த கர்னம் மல்லேஸ்வரி பின்னர் அந்த முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இப்போதைக்கு வாபஸ் பெறமாட்டேன் என்று தெரிவித்துள்ள அவர் அடுத்துகாமன்வெல்த் போட்டிகள், ஆப்பிரிக்க-ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகசாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி நான் கலந்து கொள்ளும் அனைத்துப் போட்டிகளும், எனது அதிகபட்சதிறமையைக் காட்டி நிச்சயம் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்என்றார் கர்னம் மல்லேஸ்வரி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications