பன்னீர் புஷ்பங்கள்
கணவன் மனைவியாகிப் பிரிந்த பள்ளி மாணவ-மாணவியை ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் நேற்று ஒன்றுசேர்த்தது நீதிமன்றம்.
பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் நிஜமாகியிருக்கிறது. இந்தக் காதல் கோவையில் ஒரு பள்ளியில் ஒன்றரைஆண்டுகளுக்கு முன் அரங்கேறியது.
கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்தவர் நமச்சிவாயம். இவர் கோவை குனியத்தூரில் உள்ளவி.எல்.பி., ஜானகியம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
இவருடன் சந்திபா என்ற பெண்ணும் படித்தார். இவர் கோவைபுதூரைச் சேர்ந்தவர். இருவரும் நட்புடன் பழகிவந்தனர். அது காதலாக மாறியது.
காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரிய வந்தது. பெற்றோர்களின் எதிர்ப்பு கிளம்பியது. பிரச்சனை விஸ்வரூபம்எடுத்தது. ஆனால், காதலை இருவரும் கைவிடவில்லை. அலைபாயுதே ஸ்டைலில் நண்பர்களின் உதவியுடன்,நமச்சிவாயம்-சந்திபாவைக் கரம் பிடித்தார்.
இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியனராக இருவரும் தனி வாழ்க்கை நடத்தினர். ஆனால்தொல்லைமேல் தொல்லை. கோவை நீதிமன்றத்தில் இருவரும் சரணடைந்தனர். ஆனால் அங்கும் அவர்களுக்குப்பிரச்னை எழுந்தது.
சந்திபாவிற்கு 18 வயது பூர்த்தியடைய 18 மாதங்கள் பாக்கியிருந்தன. சட்டப்படி இருவரின் திருமணமும் செல்லாதுஎன நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மைனர் பெண்ணைக் கடத்தி திருமணம் செய்து கொண்டதற்காக 15 நாள் சிறைத்தண்டனை நமச்சிவாயத்திற்கு கிடைத்தது.
மாஜிஸ்திரேட்டிடம் சந்திபா, "தான் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை, காதலனுடன் தான் வாழ வேண்டும்என்று பிடிவாதமாகக் கூறவே, அவர் மகளிர் பாதுகாப்பு நிலையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். தம்பதியரைநீதிமன்றம் சட்டப்படி பிரித்து வைத்திருந்தது.
நாட்கள் கடந்தன. ஒன்றரை ஆண்டுகள் முடிந்தது. நேற்று (5ம் தேதி) சந்திபாவிற்கு 18 வயது பூர்த்தியடைந்தது.இதையடுத்து சந்திபா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக சந்திபாவின்பெற்றோர்கள் மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்து தீர்ப்பிற்காக ஆவலோடு காத்திருந்தனர்.
மாஜிஸ்திரேட் தேவி முன்பு விசாரணை நடந்தது. இந்த விசராணையின்போது, சந்திபாவிடம், "யாருடன்செல்லவிரும்புகிறாய் எனக் கேட்கப்பட்டது. சந்திபா, மீண்டும் தனது கணவனுடன் செல்லவே விரும்புவதாகக்கூறினார். எனவே அவரது விருப்பப்படி, நமச்சிவாயத்துடன் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
சட்டப்படி இந்தத் தம்பதியைப் பிரித்த நீதிமன்றமே மீண்டும் சட்டப்படியே இவர்களை சேர்த்து வைத்தது.
ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தவுடன் மீண்டும்,பிரச்னை ஏற்பட்டது. சந்திபாவை அவரது பெற்றோர்கள்தங்களுடன் வரும்படி வற்புறுத்தினர். இதனால் நீதிமன்றத்திற்கு முன்பே கைகலப்பு ஏற்பட்டது. சந்திபாவின்கழுத்தில் காயம் ஏற்பட்டது.
அங்கிருந்த வக்கீல்கள் மற்றும் போலீசார் தலையிட்டு சமரசம் செய்து வைக்க முயன்றனர். ஆனால், பிரச்சனைமுடியவில்லை. மீண்டும் சந்திபா, உடனே மாஜிஸ்திரேட் தேவி முன்பு மீண்டும் ஆஜர் செய்யப்பட்டார்.
இப்போது சந்திபா, தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என முறையிட்டார். மாஜிஸ்திரேட் இதனை ஏற்று, சந்திபாவின்பெற்றோர்களை, எந்தவித்திலும் இந்த புது ஜோடிகளுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என எச்சரிது அனுப்பிவைத்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications