தெ.ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாக இயக்குநராக கருப்பர் இனத் தலைவர் நியமனம்
ஜொகான்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ாக ஜெரால்டுமஜோலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கருப்பர் இனத்தைச் சேர்ந்தமுதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இப்போது வாரியத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள அலி பாச்சர் பதவி விலகுவதைஅடுத்து அப் பதவிக்கு ஜெரால்டு மஜோலா நியமிக்கப்பட்டுள்ளார்.
2003-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறஉள்ளது. அதற்கான போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவராக அலி பாச்சர்நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்துஅவர் விலகியுள்ளார்.
வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவிக்கு திறமையுள்ள பலருடைய பெயர்கள்பரிசீலிக்கப்பட்டன. ஆனால், அப் பதவிக்கு ஜெரால்ட் மஜோலா ஏகமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றார் வாரியத் தலைவர் பெர்சி சோன்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் வீரராகவும், நிர்வாகியாகவும் பலபொறுப்புகளில் மஜோலா பணியாற்றியுள்ளார். நீண்ட காலமாக தென் ஆப்பிரிக்ககிரிக்கெட்டுடன் தொடர்பு கொண்டுள்ள அவர் வாரியத்தின் நிர்வாக இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அது தவிர, நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில் விளையாட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்குத் தடைவிதிக்கப்பட்டது.
இத் தடை 1991-ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. முதன்முதலாக தென்ஆப்பிரிக்க அணியை தனது நாட்டுக்கு அழைத்து அதனுடன் விளையாடிய முதல் நாடுஇந்தியாதான்.
நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்த தென் ஆப்பிரிக்காவில், அந் நாட்டுகிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக ஒரு கருப்பர் நியமிக்கப்பட்டுள்ளதும்குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் இரு சிறப்பு அம்பயர்கள் நியமனம்:
தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இரு சிறப்ப அம்பயர்களையும், 3 தொழில்முறைஅம்பயர்களையும் நியமித்துள்ளது.
சிரில் மிட்ச்லே, ரூடி கோயர்ட்சன் ஆகியோர் சிறப்பு அம்பயர்களாகநியமிக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநர் பிரையன்பாஸ்ஸோன் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications