ஐந்தாவது முறையாக காட்டுக்குப் புறப்பட்டார் கோபால்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்க ஐந்தாவது முறை நக்கீரன் கோபால்ஞாயிற்றுக்கிழமை காலை காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் அரசு தூதராக நான்கு முறை காட்டிற்கு சென்று வந்தஅரசு தூதர் நக்கீரன் கோபால் ஐந்தாவது முறையாக காட்டிற்கு ஞாயிற்றுக்கிழமையன்றுகிளம்பிச் சென்றார்.
சென்னையில் இருந்து நக்கீரன் ஆசிரியர் கோபாலும்,ஏற்கனவே காட்டிற்கு சென்றநக்கீரன் குழுவினரும் சேர்ந்து காட்டிற்குள் செல்வாக்கள் என கூறப்படுகிறது.
அரசு தூதரான நக்கீரன் கோபாலுடன் இந்த முறை புதிதாக மூன்று பேர் செல்வார்கள்என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பழ. நெடுமாறன், புதுவை மக்கள் சிவில் உரிமைக்கழக செயலாளர் சுகுமாரன் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர்ஒருவரும் காட்டிற்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
அரசு தூதர் தவிர, பழ.நெடுமாறன், சுகுமாறன், பேராசிரியர் மூன்று பேரையும் காட்டில்இருந்து வீரப்பன் பத்து நாட்களுக்கு முன்பே காட்டிற்கு அழைத்து வரச்சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி, அரசு தூதரிடமே, மூவரையும் அழைத்து வாருங்கள் என வீரப்பன்சொன்னாராம். நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கடந்த முறை காட்டுக்குச் சென்ற போது,வீரப்பனுக்கும், தூதருக்கும் சுமுகமான சூழ்நிலை இல்லை என்கிறார்கள்.
என் கோரிக்கைகள் எதையும் இரு அரசுகளும் நிறைவேற்றாமல் நாடகமாடிக்கொண்டிருக்கிறது என்று ஆவேசப்பட்டாராம் வீரப்பன்.
இந்த நிலையில்தான், நெடுமாறன், சுகுமாரன், பேராசிரியர் ஆகிய மூவரையும்அழைத்துவரும்படி வீரப்பன் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோபால் மட்டுமே சென்னையில் இருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார். மற்றவர்கள்பற்றி ஏதும் தெரியாது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications