யுகோஸ்லாவியா புதிய அதிபராகப் பதவியேற்றார் விஜிஸ்லாவ் கோஸ்டுனிகா
பெல்கிரேடு:
யுகோஸ்லாவியா நாட்டின் புதிய அதிபராக விஜிஸ்லாவ் கோஸ்டுனிகாஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் இவர் முன்னாள் அதிபர் ஸ்லோபோடன்மிலோசெவிக்கைத் தோற்கடித்தார். ஆனால், தோல்வியை ஒப்புக் கொள்ளமிலோசெவிக் மறுத்து பதவியிலிருந்து விலக மறுத்துவிட்டார்.
இதையடுத்து நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தஒரு கும்பல் கட்டத்துக்குத் தீவைத்தது. மேலும் அங்கிருந்த பல பொருட்களைச்சூறையாடியது.
இத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன.மிலோசெவிக்குக்கு ஆதரவாக இருந்த ரஷ்யாவும், தேர்தலில் வெற்றி பெற்றகோஸ்டுனிகாவை புதிய அதிபராக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.
இதையடுத்து பதவியிலிருந்து மிலோசெவிக் நீக்கப்பட்டார். இப்போது புதியஅதிபராக கோஸ்டுனிகா பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
வன்முறையாளர்களால் நாடாளுமன்றக் கட்டடம் சேதப்படுத்தப்பட்டதை அடுத்துபதவியேற்பு விழா, நவீன மாநாட்டுக் கூடத்தில் நடைபெற்றது. மிகவும் எளிமையாகஇவ் விழா நடத்தப்பட்டது.
புதிய அதிபர் பதவியேற்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத் தொடரும்அப்போதே தொடங்கியது.
யுகோஸ்லாவியா நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பு அதன்படி நடப்பேன்.நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டையும்கட்டிக்காப்பேன். நாட்டு மக்களின் உரிமைகளுக்கு மதிப்புக் கொடுப்பேன்.
மரியாதையுடனும், சுயநினைவுடனும் எனது பணியை நான் மேற்கொள்வேன் என்றுபதவியேற்வு நிகழ்ச்சியில் அதிபர் கோஸ்டுனிகா உறுதி எடுத்துக் கொண்டார்.
கடந்த மாதம் நடத்த தேர்தலில் கோஸ்டுனிகாவின் கட்சி பெரும்பான்மை இடங்களில்வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பதவியிலிருந்து நீக்கப்பட்ட மிலோசோவிக்,யுகோஸ்லாவியாவிலேயே தொடந்து இருந்து நாட்டில் அரசியல் ரீதியான எதிர்ப்பைத்தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications