இஸ்ரேல் விரைந்தார் கோஃபி அன்னான்
ஜெருசலம்:
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், திங்கள்கிழமை காலை இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களை அடுத்து அங்கு அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள அவர் அங்குவிரைந்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே, பாலஸ்தீனியர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரை மற்றும் காஸாபகுதியில் கடந்த 11 நாட்களாக கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் 80 பேருக்கும் மேல் இறந்துள்ளனர்.
தொடர்ந்து பாலஸ்தீன கொரில்லா படையினருக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
மோதலுக்குக், இஸ்ரேலும், பாலஸ்தீனமும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. பாலஸ்தீனம் தனது தாக்குதலை நிறுத்தவேண்டும்.இல்லையென்றால் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் எஹுத் பாரக் 48 மணி நேர கெடு விதித்துள்ளார்.
எல்லாவற்றுக்கும் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில் பாரக் மீது பாலஸ்தீனம்குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு ஆசிய அமைதி ஏற்படுவதை இஸ்ரேல் விரும்பவில்லை என்று பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
இப் பிரச்சினையை அடுத்து இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் விரைந்துள்ளார்.
அங்கு ஏற்பட்டுள்ள வன்முறையைத் தடுத்து நிறுத்தும் பணிகளை அவர் விரைந்து மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இணைந்துபணிகளை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் இஸ்ரேல் செல்வார் என்று கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications