ஷார்ஜா கிரிக்கெட்: இந்திய அணியில் மாற்றமில்லை
மும்பை:
ஷார்ஜாவில் இம் மாதம் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள ஒருநாள்கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. நாக்-அவுட்கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டுள்ள அணியே ஷார்ஜா கிரிக்கெட்போட்டியிலும் கலந்து கொள்ளும்.
அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச்செயலர் ஜெயவந்த் லேலே திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் பெயர் இம் மாத இறுதியில் அறவிக்கப்படும்.தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள கெய்க்வாட் நவம்பர் மாதம் வரைஅப் பொறுப்பில் இருப்பார்.
புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஜெஃப் மார்ஷ், நியுசிலாந்தின் ஜான் ரைட்ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றார் லேலே.
ஷார்ஜா போட்டியில் இந்தியா தவிர இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும்கலந்து கொள்கின்றன.
தற்போது ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாகவிளையாடி வருகிறது. இதுவரை நடந்த இரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுஅரையிறுதியில் நுழைந்துள்ளது.
கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை இந்தியா20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜா போட்டிக்கான இந்திய அணி விவரம்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் திராவிட் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர்,எஸ். ஸ்ரீராம், யுவராஜ் சிங், வினோத் காம்ளி, ராபின் சிங், விஜய் தாஹியா, அஜித்அகர்கர், அனில் கும்ளே, வெங்கடேஷ் பிரசாத். சுனில் ஜோஷி, ஜாகீர் கான், ஹேமங்பதானி.
மேலும், ரஞ்சி கோப்பை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராக அக்டோபர் 13-ம்தேதி நடைபெறும் ஆட்டத்தில் கலந்து கொள்ளும் இதர இந்திய அணியையும் வாரியம்அறிவித்துள்ளது.
அணியின் கேப்டனாக வி.வி.எஸ். லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீநாத்தும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.
அணி விவரம்:
வி.வி.எஸ். லக்ஷ்மண், ஜவகல் ஸ்ரீநாத், சடகோபன் ரமேஷ், சிவ் சுந்தர் தாஸ், முகம்மதுகைஃப், ஜேகப் மார்ட்டின், அபிஜித் கலே, வீரேந்திர ஷேவாக், அஜய் ராத்ரா, முரளிகார்த்திக், ஆஷிஷ் நெஹ்ரா, லக்ஷ்மி ரத்தன் சுக்லா, ஷாரான்தீப் சிங், ரிதீந்தர் சிங்சோதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications