இலங்கை தேர்தல்: வாக்காளர்களை மிஞ்சிய ராணுவ வீரர்கள்
யாழ்ப்பாணம்:
இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவில்,யாழ்ப்பாணத்திலிருந்த வாக்குச் சாவடிகளில் ஒவ்வொரு வாக்குப் பெட்டிக்கும்கிட்டத்தட்ட இரண்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தனர்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில், விறுவிறுப்பானவாக்குப் பதிவு இருந்தது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, சிறுபான்மைத் தமிழர்களுக்கு பல்வேறுசலுகைகள் தர வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை அதிபர் சந்திரிகாவால்நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்பதால் இந்தத் தேர்தல் முடிவுகளைஇலங்கை மட்டுமல்லாது, இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் தமிழர் பகுதிகளில் சரியானமுறையில் நடக்க வாய்ப்பில்லை என தனியார் தேர்தல் கண்காணிப்புக் குழுகூறியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் சண்டை காரணமாக கிட்டத்தட்ட 10லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி விட்டனர்.மேலும் 4 லட்சம் பேரும் தங்களது பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்தநிலையில் அங்கு தேர்தல் நடப்பதே வீண் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
தப்பி புகலிடம் தேடி வெளியேறியுள்ள 4 லட்சம் தமிழர்களும், விடுதலைப் புலிகளைமீறி வந்து ஓட்டுப் போடுவது இயலாத காரியம் எனக் கூறும் அந்த அமைப்பு, இந்தத்தேர்தலில் தமிழர்கள் பகுதிகளில் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்றுதெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கொழும்பு நகரில் வசிக்கும் மக்கள் உணவுப் பொருட்கள் மற்றும்எரிபொருட்களை சேமிக்கத் துவங்கி விட்டனர். தேர்தலுக்குப் பிறகு பல்வேறுகட்சிகளின் தொண்டர்களிடையே நடக்கும் மோதல் மற்றும் ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்பட்டால் சமாளிப்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை.தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவை அமல் செய்வது இலங்கை ராணுவத்தின்வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் குறித்து மக்கள் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். 1983-ம்ஆண்டிலிருந்து ராணுவமும், விடுதலைப் புலிகளும் யாழ்ப்பாணத்தை மாறி, மாறிகைப்பற்றி வருவதால் மிகவும் சோர்ந்து போய், நிச்சயமற்ற எதிர்காலத்தை எண்ணி குழப்பத்தில் உள்ளனர் அவர்கள்.
குண்டுவீச்சில் சேதமடைந்த வீடுகள், சிதிலமடைந்த வீட்டு மேற் கூரைகள், துப்பாக்கிக்குண்டுகள் துளைத்த வீட்டுச் சுவர்களே யாழ்ப்பாணத்தின் தற்போதைய மிச்சங்கள.
பாலமுருகன் என்பவர் கூறுகையில், நான் ஓட்டுப் போடுவதற்கு வாய்ப்பில்லை. நான்ஓட்டுப் போட்டால் மட்டும் போர் ஓய்ந்து விடுமா என்கிறார்.
இதற்கிடையே, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட இலங்கைப் பகுதியில்அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் ராணுவம் விரிவான பாதுகாப்புஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஒவ்வொரு வாக்குப் பெட்டிக்கும் இரண்டு ராணுவவீரர்கள் வீதம் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications