யாழ்ப்பாணத்தில் கடும் சண்டை: நூற்றுக்கணக்கில் புலிகள், ராணுவத்தினர் சாவு
கொழும்பு:
இலங்கை ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வடக்குயாழ்ப்பாணப் பகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது என்று தமிழ் கட்சிகளின்அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகர் அமைந்துதள்ள வாலிகாமம் பகுதியில் விடுதலைப் புலிகள் கடும்தாக்குதலை மேற்கொண்டிருப்பதாகவும், அதற்கு ராணுவ வீரர்கள் பதிலடிதருவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரமாக நடக்கும் இந்த சண்டையில் இரு தரப்பிலும் 100-க்கணக்கில் சாவுஇருக்கலாம் என்று கருதப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை வாலிகாமம் பகுதியில் அமைந்துள்ள ராணுவமுகாம்கள் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலைத் துவங்கினர். சரமாரியானதாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ராணுவத்தினர் திணறியதாகவும் செய்திகள்கூறுகின்றன.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அனந்தசங்கரி கூறுகையில்,வாலிகாமம் பகுதியில் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த நிலையில் யாருக்குமே அதுகுறித்துச் சிந்திக்கவேநேரமில்லை. அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சமே அனைருடைய மனங்களிலும்குடி கொண்டிருந்தது.
நான் கூட யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. வெளியில்சென்றால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் எனது அலுவலகத்தை விட்டுவெளியேறவில்லை என்றார் அவர்.
இதற்கிடையே, கொழும்புத்துறை பகுதியில்ம் கடும் சண்டையில்பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. திங்கள்கிழமைஇரவு முழுவதும் இப்பகுதியில்கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வந்தது. யாழ்ப்பாணத்திற்கு தெற்கேகொழும்புத்துறை உள்ளது.
வாலிகாமம், கொழும்புத்துறை பகுதிகளைத் தவிர வட இலங்கையின் பிற பகுதிகளில்அமைதி நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட இலங்கையில்செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்ததாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 9 தொகுதிகள் வட இலங்கையில் உள்ளன. இவற்றில் மொத்தம் 450 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 20 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில்உள்ளனர். இங்கு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
ஆகஸ்ட் 28-ம் தேதி தேர்தல் பிரசாரம் துவங்கிய நாள் முதலே யாழ்ப்பாணத்தில் கடும்சண்டை நடந்து வருகிறது. பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்த தீவிரவாதஅமைப்புகளின் வாக்குகளைப் பெறவே யாழ்ப்பாணத்தில் ராணுவத் தாக்குதலைஅதிபர் சந்திரிகா மேற்கொண்டு வருகிறார் என எதிர்க்கட்சியான ஐகிய தேசியக் கட்சிகூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications