டீசல் விலை உயர்வு: வாஜ்பாயை சாடுகிறார் சோனியா
போபால்:
பாரதிய ஜனதாக் கட்சியின் பொருளாதாரக் கொள்கை, சாதாரண மனிதனைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்தியப் பிரதேச மாநிலம் சென்ற சோனியாகாந்தி அங்கு காந்த்வா மாவட்டத்தில் ஜிகிரி, பெட்டூல் மாவட்டத்தில் பாத்கிராமம் மற்றும் சிந்வாரா பகுதிகளுக்குச் சென்றார்.
ஜிகிரியில் அவர் நாடாளுமன்ற முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் சிவகுமார் சிங்கின் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் இன்ஜினியரிங் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவிலும் கலந்து கொண்டார்.
பின்னர் நடந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களான, பெட்ரோல், டீசல்,சமையல் கியாஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது. இதனால் சாதாரண மனிதர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். இந்த நேரத்தில்இந்த விலைஉயர்வு தேவையில்லாதது.
வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியினர் சந்தர்ப்பவாதிகள். அவர்களுக்கு பதவி ஆசை மட்டும்தான் உள்ளது. மக்களின் பிரச்சனைகளைஅவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்றார் சோனியா காந்தி.
ஜிகிரி பயணத்தை முடித்துக்கொண்டு அவர் பெட்டூல் மாவட்டம் பாத் கிராமத்திற்குச் சென்றார். அங்கு வைரல் காய்ச்சல் மற்றும் மலேரியாவினால்பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய சோனியா மலேரியா மற்றும் வைரல் நோய்கள் பரவாமல் தடுக்கமாநில அரசும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதியளித்தார்.
அங்கிருந்து சிந்துவாரா பகுதிக்குச் சென்ற சோனியா, அங்கு முன்னாள் பிரதமரும், தனது கணவருமான ராஜீவ்காந்தி நினைவு இல்லத்தைத் திறந்துவைத்தார்.
கர்நாடகா, நாகலாந்து மாநிலங்களைப் போல் மத்தியப்பிரதேசத்திலும் காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்து வருகிறது. முன்னதாக மத்தியப் பிரதேச மாநிலம்இந்தூர் விமானநிலையத்தில் மாநில முதல்வர் திக் விஜய் சிங், சோனியா காந்தியை வரவேற்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications