காவிரியில் வெள்ளம் ... 1000 குடிசைகள் மூழ்கின
ஈரோடு:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தாழ்வான பகுதியில் இருந்த 1000 குடிசைகள் நீரில் மூழ்கின.
காவிரி ஆற்றின் நீர்ப் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்துஇந்த ஆற்றின் கரையோரம் உள்ள பள்ளிபாளையம், பவானி, குமாரபாளையம்,ஈரோடு ஆகிய இடங்களில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளப் பெருக்கில் கரையோரம் தாழ்வான பகுதியில் இருந்த 1000 குடிசைகள் நீரில்மூழ்கின. இங்குள்ள ஆற்றில் தற்போது ஏழரை அடி அளவிற்குத் தண்ணீர் சென்றுகொண்டுள்ளது.
ஏற்கனவே, வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால் பெரும் உயிர்சேதம்தவிர்க்கப்பட்டது. மேலும் வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளைஎடுத்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவுஅதிகரித்துள்ளது. இந்த தண்ணீரின் அளவு, நிமிடத்திற்கு ஒரு லட்சம் கன அடி என்றவிகித்தில் தற்போது வந்து கொண்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் தற்போது 122 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையின் 16 கண் பாலம் எனப்படும் மதகு திறக்கப்பட்டுள்ளது. இதனால்அதிகபட்ச தண்ணீரை அணையிலிருந்து வெளியேற்ற முடியும். இது தவிர, நாமக்கல்,ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், நாகபட்டிணம், திருவாரூர் மற்றும் காரைக்கால்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது.இவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளைவருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications