நண்பனைக் கொன்ற நண்பர்கள்
ஈரோடு:
ஆற்று வெள்ளத்தில் மூழ்கடித்து நண்பரைக் கொலை செய்த மூன்று பேரில் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் ஒரு விசைத்தறியில் தர்மராஜ், பாஸ்கரன், செல்லத்துரை மற்றும்நாகராஜன் ஆகிய நால்வரும்வேலை பார்த்து வந்தனர். இவர்கள் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டைச்சேர்ந்தவர்கள். நான்கு பேரும் ஒரே வீட்டில் தங்கியிருந்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர்.
நாகராஜன் அனைவருக்கும் சமையல் செய்து கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆடி 18ம் நாளில்பண்டிகைக்கு விசேஷ சமையல் செய்து வைத்திருந்தார். இதனை பாஸ்கரன் ருசித்து சாப்பிட்டு விட்டார். எனவே,இதில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே, நாகராஜனைத் தனியாக விட்டு விட்டு மற்ற வரும் வேறுஇடத்தில் அறை எடுத்துத் தங்கினர். ஆனால் இவர்கள் மூவரும் நாகராஜனுக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது.நாகராஜன் இது தொடர்பாக வற்புறுத்தி வந்துள்ளார்.
எனவே, தொல்லை தாங்காத நண்பர்கள் நாகராஜனைக் கொலை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து மூவரும்நாகராஜனை அழைத்துக் கொண்டு ஒரு ஓட்டலில் நன்கு சாப்பிட்டனர். பின்னர் குளிப்பதற்காக ஆற்றுக்குச் செல்லமுடிவு செய்தனர்.
மூவரும் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நாகராஜனை தண்ணீரில் அமுக்கிக் கொலைசெய்துள்ளனர். இந்த சம்பவம் முடிந்தவுடன் மூவரும் தலைமறைவாகி விட்டனர்.
தனது மகனிடமிருந்து தகவல் எதுவும் வராத நிலையில், நாகராஜனின் தந்தை ஒரத்தநாட்டிலிருந்துகருங்கல்பாளையத்திற்கு வந்தார். அங்கு மகனைக் காணததால் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில்போலீசார் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தர்மராஜ் என்பவர்செவ்வாய்க்கிழமை பிடிபட்டார். இவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications