இன்றைய ஸ்பெஷல்:ஆமை ரோஸ்ட், நண்டு மசாலா, தவளை கறி, உடும்பு சாப்ஸ்...
என்ன ஜின்-யுவான்-சேங் ஹோட்டலுக்குள் நுழைந்த மாதிரி இருக்கிறதா.
இதெல்லாம் தமிழகத்திலேயே கிடைக்கிறது. கோயம்புத்தூர் அருகே படுஜோராக நடக்கிறது இந்த ஊர்வன கறிவியாபாரம்.
கோவையிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேரள-தமிழக எல்லையில் தான் இந்த விற்பனை நடந்துவருகிறது. வாளையார் எனப்படும் இந்த எல்லையிலிருந்து கேரள மாநிலத்தின் உள்பகுதிக்குச் சென்றால்,எங்கெங்கு காணிணும் கள் விற்கும் கடைகள் தான்.
இந்தக் கள்ளுக் கடைகளின் வாசல்களில் வடை சுடுவது மாதிரி தவளையையும், ஆமையையும் சமைத்துக்கொடுக்கிறார்கள்.
ஒரு பாட்டிலை உள்ளே அனுப்பிவிட்டு நமது குடிமக்கள் ஆமை, நண்டு, வண்டு, தவளை, உடும்பு என இந்தவிபரீத உணவுகளை ருசி பார்க்கின்றனர்.
சாராயத்துக்கு ஊருகா மாதிரி கள்ளுக்கு தொட்டுக் கொள்ள வெஞ்சனம் போல இந்த உயிர்களை ஒரு கைபார்க்கின்றனர். இதை சாப்பிடுவதற்காக கோவை நகரிலிருந்து பெரிய பெரிய வர்த்தகர்கள் உள்பட பலரும்படையெடுக்கின்றனர்.
இந்தக் கறி வகைகளில் மிக விசேஷமானது உடும்புக் கறியும், தவளைக் கறியும் தான். தவளைக் கறி "பிரை செய்துஉடனடியாகக் கிடைக்கும். ஆனால், உடும்புக் கறி மட்டும் பெற கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.
இதனை சாப்பிட முன் கூட்டியே "ஆர்டர் செய்ய வேண்டும். அட்வான்சும் தர வேண்டும். (வீரப்பனுக்கு மிகவும்பிடித்த உணவும் உடும்பு தான்!). அவ்வாறு ஆர்டர் செய்த பின்னர் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். உடும்பைபிடித்த பிறகு உங்களுக்கு போன் செய்வார்கள். நீங்கள் விரும்பினால், உடும்பை வீட்டிற்கு எடுத்துச் சென்றுசமைத்துச் சாப்பிடலாம். ஆனால், சமைத்த கறிவேண்டுமானால், அதே இடத்தில், உங்கள் கண்முன்னாலேயேதோலை உரித்து, மசாலா தடவி ஒரு வர்ணஜாலமே காட்டி சமைத்துப் போடுவார்கள்.
தவளைக் கறியைப் பொறுத்தவரை பஜ்ஜி மாதிரி தான். இன்ஸ்டன்ட்டாக அப்போதே எண்ணெயில் போட்டுபொரித்துக் கொடுப்பார்கள். இந்த கறி தான் கள்ளுக்குத் தொட்டுக் கொள்ள விசேஷமானது. இது தவிர கேரளமக்கள், தங்கள் குழந்தைகளுக்கு இந்த "தவளை பிரையை விரும்பி வாங்கிக் கொடுக்கின்றனர்.
கேட்டால், இதனைச் சாப்பிட்டால், சளி, மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்றவை சரியாகும் என வோர்லட் ஹெல்த்ஆர்கனைசேசனுக்கே தெரியாத மருத்துவ விவரங்களை அருள்கின்றனர்.
இது தவிர, ஆமை, நண்டு ஆகியவை கடலில் இருந்து பிடித்து வரப்படுகின்றன. இவை இங்கு தண்ணீரில்உயிருடன் வளர்க்கப்படுகின்றன. தேவைப்படும்போது இவை சமைக்கப்படுகின்றன.
ஆமையை வெந்நீரில் போட்டு ஓடுகளை நீக்குகின்றனர். பின்னர் இதனை சமயத்திற்கேற்ப சமைக்கப்பயன்படுத்துகின்றனர்.
இந்த ஊர்வனவற்றின் விலையும் ஸ்பெஷல் தான். உடும்புக் கறி யின் விலை ரூ. 500லிருந்து 1000ரூபாய் வரை.தவளை பிரை பிளேட் ஒன்றிற்கு, 20 ரூபாய்.
ஆமையின் விலை, ரூ. 100 முதல் ரூ. 200 வரை.
வன மிருகங்களை வேட்டையாடுவது தவறு, அதைக் காட்டுப் பகுதியிலேயே வைத்து வடை சுடுவது மாதிரி சுட்டுத்தின்பது அதனினும் தவறு. இதுவரை வீரப்பனுக்கு மட்டுமே இருந்து வந்த இது போன்ற சுதந்திரம் அனைவருக்கும்கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.
ஓட்டுக்குள் புகுந்து கொண்ட ஆமை மாதிரி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது வனத்துறை.












Click it and Unblock the Notifications