மீண்டும் செல்வாக்கு பெறும் இந்திய கிரிக்கெட்
டெல்லி:
நைரோபியில் நடந்து வரும் ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப்போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ள நிலையில், இந்தியாவில்கிரிக்கெட் மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
மேட்ச் பிக்ஸிங் புகாரினால் இந்திய கிரிக்கெட் சமீப காலமாக சோர்வுடன்காணப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒரு மாதிரியாகவே பார்க்கப்பட்டனர்.ஒவ்வொரு வீரர் குறித்தும் கதைகள் கூறப்பட்டன. மொத்தத்தில் இந்தியாவில்கிரிக்கெட் தனது செல்வாக்கை இழந்து விட்டதாகவே கருதப்பட்டது.
இந்த நிலையில் வந்தது மினி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி எனஅழைக்கப்படும் ஐ.சி.சி. நாக் அவுட் தொடர். இந்தப் போட்டியின் அரை இறுதிக்குஇந்தியா தகுதி பெற்றுள்ளது. முதல் போட்டியில் கென்யாவை வீழ்த்தியபோது,கென்யாவை வெல்வது பெரிதல்ல என்று கூறினர். ஆனால் உலக சாம்பியன்ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபோது, இந்திய ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்குச்சென்றனர்.
இந்திய கிரிக்கெட மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறித்த கிரிக்கெட்கமெண்டரிகளை செய்து வரும் நரோத்தம் பூரி கூறுகையில், இந்திய ரசிகர்களின் மனநிலையை ஊகிப்பது மிகவும் கடினமான செயல். மேட்ச் பிக்ஸிங்கினால் ஏற்பட்டகுழப்பம் இன்னும் தொடர்கிறது. இருப்பினும் இதுவரை யாருடைய குற்றமும்நிரூபிக்கப்படாதது ரசிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றார்.
சர்வீசஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இப்போதையைபயிற்சியாளருமான ஆர்.கே.ஓரி கூறுகையில், முன்பெல்லாம் கிரிக்கெட் பயிற்சிக்காகசிறுவர்கள், மாணவர்களின் பெற்றோர் அலைமோதூர்கள். ஆனால் மேட்ச் பிக்ஸிங்புகாருக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைந்து விடடது. வேறு விளையாட்டுகளைகற்றுக் கொள்ளுமாறு தங்களது குழந்தைகளிடம் பெற்றோர் கூற ஆரம்பித்து விட்டனர்என்கிறார் ஓரி.
தற்போதைய நைரோபித் தொடர் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு மீண்டும் மரியாதையைஈட்டிக் கொடுத்துள்ளது. இறுதிப் போட்டிக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்பும், வழக்கம் போல பெட்டிங்கும் துவங்கி விட்டன.
இதற்கிடையே, இந்தியாவுடன், அரை இறுதிப் போட்டியில் விளையாட தென்ஆப்பிரிக்க அணி தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடன் நடந்த கால் இறுதிப்போட்டியில் அது வெற்றி பெற்றது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications