முஸ்லீம்களுக்கு அதிக சலுகையா? பா.ஜ.க. மீது பாய்கிறது சிவசேனா
லக்னோ:
முஸ்லீம்களிடம் பரிவு காட்டி, அவர்களது ஆதரவைப் பெற பாரதிய ஜனதா கட்சி முயல்கிறது என்று தேசியஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிவசேனா சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பேரணி நடத்தப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர்சுபாஷ் தேசாய் பேரணியில் பேசுகையில், முஸ்லீம்களின் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாக பெறும் வகையில்பாரதிய ஜனதாக் கட்சி அவர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
குறிப்பாக பிரதமர் வாஜ்பாயும், அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணனும் இந்தவிஷயத்தில் மிகவும் தவறாக செயல்படுகிறார்கள். இதை சிவசேனா மிகவும் கண்டிக்கிறது.
பிரதமர் வாஜ்பாய்க்கு மும்பை ப்ரீச் கண்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. அவர்விரைவில் குணமடைய நாங்கள் எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், பாரதிய ஜனதாக் கட்சியினர் தங்களது இந்துத்துவா கொள்கைகளுடன் செயல்படுகிறார்கள். அவர்கள்இந்துத்துவா கொள்கைகளைத் தொடர நினைத்தால் நாங்கள் அவர்களுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ்பெறவும் தயங்க மாட்டோம்.
பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் பங்காரு லட்சுமணன், ராமனையும், ரஹீமையும் ஒன்றாக இணைக்கப் பார்க்கிறார்.அது ஒருபோதும் நடக்காது.
டெல்லியில் சிவசேனா, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா, தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் அவர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டாமல் இருக்காது என்றார் சுபாஷ்தேசாய்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications