இனவாதத்தை நிராகரித்த இலங்கை மக்கள்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் அதிகம் பரபரப்பூட்டிய சிங்களஇனவாத கட்சியான சிங்கள உருமயா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. மக்கள்இதுபோன்ற கட்சிகளுக்கு ஆதரவாக இல்லை என்பதையே இது காட்டுவதாகஅரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவம் படுதோல்வி கண்டு கொண்டிருந்த நேரத்தில் அரசின் போக்கைக் கண்டித்து இந்தக கட்சிபிறந்தது.
அரசைக் குறை கூறி மக்களின் வாக்குகளைப் பெற கணக்கிட்டது இந்தக் கட்சி. ஆனால்இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட இந்தக் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.சில இடங்களில் மூன்று இலக்கத்தை கூட எட்ட முடியவில்லை.
விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் உள்ள யாழ்ப்பாணத்தில் கூட இக்கட்சிபோட்டியிட்டது. அங்கிருந்து வெளியேறிய சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறஅது கணக்குப் போட்டது. ஆனால் அது கூட கிடைக்கவில்லை.
இந்தக் கட்சி குறித்து ஒரு பத்திரிகையாளர் கூறுகையில், ஒருவேளை லண்டன், பாரீஸ்அல்லது நியூயார்க் நகரங்களில் வாக்குச் சாவடிகளை அமைத்திருந்தால், இக்கட்சிக்குசில வாக்குகள் கிடைத்திருக்கும். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மேல் தட்டுமக்களைக் கொண்ட சிங்களக் கட்சி இது என்றார்.
சிங்கள உருமயா கட்சியில் முக்கிய உறுப்பினர் ஒருவர் இருக்கிறார். அவர்தான்வெட்டிமுணி ரோஹன டிசில்வா. 1987-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொழும்புவில் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றபோது அவரது தலையில்துப்பாக்கியால் அடித்தவர் இவர்தான்.
இந்தக் கட்சியின் தலைவர் குணசேகரா தேர்தல் பிரசாரத்தின்போது பேசுகையில்,பிரபாகரனை சவப் பெட்டியில் பார்க்க விரும்புகிறோம் என்று கூறியிருந்தார். ஆனால்அவர்களது கட்சியின் இப்போதையை நிலை அதை விட மோசமாகவே இருக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications