ஜெ. முடிந்தது .. அடுத்த குறி கருணாநிதி தான்: சுவாமி எச்சரிக்கை
சென்னை:
ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைத்து விட்டதால் திமுகவினர் மகிழ்ச்சி அடையவேண்டாம். அடுத்ததாக கருணாநிதி மீதும் வழக்குத் தொடரப் போகிறேன் என்றுஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்.
டான்சி வழக்கில் ஜெயலலிதா சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கு காரண கர்த்தாவே இந்தசாமி தான். இவர் தொடர்ந்த வழக்கில் தான் டான்சி விவகாரமே வெடித்தது.
இப்போது இவர் ஜெயலலிதாவுக்கும் வேண்டாதவர்; கருணாநிதிக்கும் ஆகாதவர்என்ற நிலையில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே கருணாநிதியையும்விட்டு வைக்கப் போவதில்லை என்று எச்சரித்துள்ளார்.
வேலூரில் நடந்த ஜனதா கட்சிக் கூட்டம் ஒன்றில் சாமி பேசியதாவது:
பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமென நான் வழக்கு போட்டபின்னர் தான் அரசுக்கு அக்கறையே வந்துள்ளது.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவிற்கு 3 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது குறித்துதிமுகவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர். நான் அதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனை குறித்து திமுகவினர் சந்தோஷப்படவேண்டாம். என்னுடைய அடுத்த வழக்கு கருணாநிதி மீது தான். அதனால்ஜெயலலிதாவும் கவலைப்பட வேண்டாம்.
டான்சி வழக்கில் ஒருவேளை ஜெயலலிதாவிற்கு ஆதரவாக தீர்ப்புவழங்கப்பட்டிருந்தால் டிவியில் ஜெயலலிதா மீது சாமி தொடர்ந்த வழக்குதோல்வியடைந்தது என்று போட்டிருப்பார்கள்.
லோக்சபா வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்ட போது அதில் எனதுபெயர் இல்லை. அப்போது ஜெயலலிதாவை கடவுள் தான் தண்டிக்க வேண்டும்என்றேன். அது தற்போது நிறைவேறி விட்டது.
இனிமேல் அவர் பல கோடி மதிப்புள்ள ஹோட்டலுக்கு போய் வரவு செலவு கணக்குபார்க்க போகலாம்.
ஜெயலலிதாவின் சிகாகோ தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. சிகாகோரகசியத்தை தக்க நேரத்தில் வெளியிடுவேன் என்றார் சாமி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications