கவலைப்படாதீர்கள்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா கோரிக்கை
சென்னை:
டான்சி வழக்கில் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதித் தீர்ப்பல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதிமுகவினர் யாரும் கவலை அடையத் தேவையில்லை. இது இறுதி தீர்ப்புஅல்ல.மேல்முறையீடுகளுக்கு வாய்ப்புகள் உள்ளன.எனவே என்னை வேதனைப்படுத்தும் வகையில் அதிமுகவினர் யாரும்தங்களை வருத்திக் கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டாம்.
நீதிமன்றத் தீர்ப்புகளை காட்டி மக்கள் மன்றத்தில் அதிமுகவுக்கு இருக்கும் செல்வாக்கை அழிக்க நினைக்கும் எதிரிகள் இறுதியில்தோல்வி அடைவது உறுதி. இதே டான்சி வழக்கில் அடிப்படை ஆதாரமே இல்லை என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றம்என்னை விடுவித்தது.
அதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ததால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் வழக்கை விசாரித்த தனிநீதிமன்றம் வேறு வகையான, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறான தீர்ப்பை அளித்துள்ளது.
ஏற்கனவே என் மீது வழக்குத் தொடர்வதற்கு அனுமதி அளிக்க கவர்னருக்கு தகுதி உண்டா என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், திமுக அரசு அவசர அவசரமாக 2-வது கவர்னரை அணுகி அனுமதி பெற்றுவழக்கை நடத்தியது.
இப்படி முன்னுக்கு பின் முரணான தீர்ப்புகளை பார்க்கும் நமக்கு, நியாயம் கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் உறுதியாக உள்ளனஎன்பது தெளிவாகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications