இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சியாளர்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சியாளரை நியமிக்க இந்திய கால்பந்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அகில இந்திய கால்பந்துக் கழகத்தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டைச்சேர்ந்த கால்பந்து கோச் எட்சன் பிளவியோ போர்டோ எடின்ஹோ மற்றும்பயிற்சியாளர் ஜோஸ் கார்லோஸ் போன்டோஸ் டி அல்பர்க்குவிடம் பேச பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி திட்டமிட்டுள்ளார்.
இருவரும் மாதத்திற்கு தலா 7000 அமெரிக்க டாலர் சம்பளமாக கேட்கின்றனர். இதுதவிர தங்கும் இடமும் கேட்கின்றனர்.
பிரேசில் பயிற்சியாளர்களை நியமிக்கும் கருத்தை சர்வதேச கால்பந்துக் கழகசெயற்குழு உறுப்பினர் முகம்மது பின் ஹமாம் அல் அப்துல்லா, இந்திய கால்பந்துநிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications