நெடுமாறனுக்கு சிக்னல் கிடைத்தது
சத்தியமங்கலம்:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கச் சென்ற தூதுக்குழுவினருக்கு வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்துள்ளது.
வீரப்பன் விடுவிக்கக் கோரிய தடா கைதிகள் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், காட்டுக்குள் சென்றுள்ள தூதுக்குழுபேச்சுவார்த்தையை விரைவில் முடித்துக் கொண்டு திரும்பும் என்று தெரிகிறது.
அரசுத்தூதர் நக்கீரன் கோபால், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறான், பேராசிரியர் கல்யாணி, புதுவை மக்கள் சிவில் உரிமைக் கழகசெயலாளர் சுகுமாறன் ஆகியோர் வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த காட்டுக்குள் சென்றுள்ளனர்.
இவர்கள் புதன்கிழமை தாளவாடி மலைப்பகுதிக்குச் சென்றதுமே வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்துள்ளது. இவர்கள் வியாழக்கிழமை இரவு அல்லதுவெள்ளிக்கிழமை காலை பேச்சுவார்த்தை நடத்தி விட்டுத் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.
புதியத் தூதுக் குழுவில் இடம்பெற்றுள்ள நெடுமாறனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் அதிக நாட்கள் காட்டுக்குள் தங்காமல்பேச்சுவார்த்தையை விரைவில் முடித்துக் கொண்டு திரும்புவார்கள் என்று தெரிகிறது.
தடா கைதிகள் விடுவிப்பில் சட்டச்சிக்கல்கள் இருப்பதால் வீரப்பனிடம் சமாதானமாகப் பேசி, மனிதாபிமானமுறைப்படி ராஜ்குமாரை விடுவிக்கவலியுறுத்துவார்கள். பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்காவிட்டாலும் ராஜ்குமாரை மட்டுமாவது தூதுக்குழு மீட்டு வரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications