அரசியல் விமர்சனம்
டான்சி வழக்கில் - ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரத்தில் மூன்று வருட சிறை தண்டனையும், சசி எண்டர்பிரைசஸ் விவகாரத்தில் இரண்டு வருட சிறைதண்டனையும், விசேஷ நீதிமன்றத்தினால் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
தீர்ப்பு பற்றிய முதல் செய்திகள் வந்தவுடனேயே எழுதப்படுகிற தலையங்கக் கட்டுரை என்பதால். முழு விவரங்கள் எனக்குத் தெரியவில்லை ; இரண்டுதண்டனைகளையும் சேரத்தே அனுபவிக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
தண்டனைக் காலம் இரண்டாண்டுகளுக்கு மேல் இருப்பதால் - இந்த தண்டனையின் காரணமாக, வரப்போகும் தேர்தலில் போட்டியிடும் தகுதசியைஜெயலலிதா இழப்பார். இதுபற்றி இருலவித கருத்துக்கு இடமில்லை.
ஆனால் ஜெயலலிதா நிச்சயம் அப்பீல் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். அப்போது, தேர்தலில் போட்டியிடும் தகுதி இழப்பு தொடருமா, தொடராதாஎன்பது பற்றி இருவித கருத்துகக்கள் இருக்கின்றன.
அப்பீல் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படடு, நிலுவையில் இருக்கும்வரை, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவியில் தொடரும் தகுதிஇழப்பை பெற்றி விட மாட்டார் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது.
அதாவது, இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை பெறுகிற எம்.எல்.ஏ. , அல்லது எம்.பி., தகுதி இழப்பை அடைந்து, பதவியை இழப்பார் ; ஆனால்அப்பீல் செய்து ,அது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது நிலுவையில் இருக்கும்வரை, அவர் பதவயில் தொடரலாம் ; அவர் தகுதி இழப்பைப்பொறுத்தது. இது சட்டம் தெளிவாகக் கூறுகிற விஷயம்.
எம்,எல்.ஏ,, எம்.பி., விஷயத்தில் அப்பீலின் விளைவு பற்றி இப்படி தெளிவாகக் கூறியிருக்கிற சட்டம் - எம். எல்.ஏ., எம்.பி., அல்லாதமற்றவர்கள் பற்றி இது விஷயமாக எதுவும் சொல்லவில்லை.
ஆகையால் எம்.எல்.ஏ., எம்.பி., விஷயத்ததில் அப்பீல் காரணமாக தகுதி இழப்பு தள்ளி வைக்கப்படும் அப்பீல் காரணமாக தகுதி இழப்பு தள்ளிவைக்கப்படும் என்று கூறுகிற சட்டம் - மற்றவர்கள் விஷயத்தில் எதுவும் சொல்லாததால் - அவர்களைப் பொறுத்தவரையில், அப்பீல்செய்யப்பட்டாலும் தகுதி இழப்பு தொடரும் ; அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என சில சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இது பற்றி வேறு ஒரு கருத்தும் இருக்கிறது. எம்.எ,ஏ.,எம்.பி. க்கள் விஷயத்தில் அப்பீல் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டாலே போதும் -தகுதி இழப்பு தள்ளி வைக்கப்படும்.
இதைத்தான் சட்டம் கூறுகிறது. ஆனால், அப்பீலை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிற மேல் நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தண்டனைக்கு தடைவிதித்தால், அந்தத் தண்டனையின் விளைவுகள் தடைபட்டு நிற்கும்.
இதுபோன்ற வழக்குகளில் தண்டனையின் விளைவுகளில் ஒன்று - தேர்தலில் போட்டியிடும் தகுதி இழப்பு, தண்டனை தடைப்பட்டு நிற்கும் என்கிற போது,இந்த விளைவும் தடைபடத்தான் செய்யும். ஆகையால், சம்பந்தப்பட்டவர் தகுதி இழப்பு,மேல் நீதிமன்றம் விதிக்கின்ற தடை அமலில் இருக்கிறவரைதடைபடத்தான் செய்யும்.
அந்தக் காலக்கட்டத்தில் சம்பந்தப்பட்டவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கமாட்டார்! அதாவது எம்.எல்.ஏ. மற்றும்எம்.பி.க்களுக்கும் மற்றவர்களுக்குமிடையே சட்டம் செய்திருக்கிற வித்தியாசம் இதுதான் : எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோரின் அப்பீல் ஏற்றுக்கொள்ளப்பட்டாலே போதும் - அவர்களுடைய தகுதி இழப்பு தள்ளி வைக்கப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications