நாகப்பா போலீஸ் காவலில் இல்லை .. கர்நாடக டி.ஜி.பி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கன்னட நடிகர் ராஜ்குமாருடன் கடத்தப்பட்டு, வீரப்பனிடமிருந்து தப்பி வந்த உதவிடைரக்டர் நாகப்பா, போலீஸ் காவலில் இல்லை என கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பிதினகர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனு தாக்கல்செய்துள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி பிரபல கன்னட நடிகர்ராஜ்குமார் உட்பட நான்கு பேர் கடத்தப்பட்டனர். இவர்களில் உதவி டைரக்டர்நாகப்பா மட்டும் வீரப்பனிடமிருந்து கடந்தமாதம் 28-ம் தேதி தப்பி வந்தார்.

அவர் தப்பி வந்தது குறித்து பெரும் குழப்பம் நிலவியது. அவரையும் திடீரெனகாணவில்லை. இதையடுத்து மகக்ள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. எனவேஅவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உண்மை நிலை குறித்து அறிய வேண்டும் எனஒட்டபக்ஷா (வயிற்றுக் கட்சி) ரங்கசாமி என்பவர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தற்காலிக தலைமை நீதிபதி அசோக்பான், நீதிபதி குருராஜன் ஆகியோர்விசாரித்து நாகப்பா போலீஸ் காவலில் இருந்தால் அவரை 16-ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தவேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு டி.ஜி.பி. தினகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாகப்பாபோலீஸ் காவலில் இல்லை. அவர் சுந்திரமாக நாகப்பா பிளாக்கில் உள்ள அவர் வீட்டில்இருக்கிறார். அவருக்கு போலீஸ் காவல் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது எனதெரிவித்திருக்கிறார்.

ரங்கசாமி அளித்த மனுவில், தான் நாகப்பா வீட்டு வாசலில் அவரை 16-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்ட நோட்டீசை ஒட்டிவிட்டு வந்துள்ளதாககூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+