சந்திரிகாவுக்கு முஸ்லிம் கட்சி நிபந்தனையுடன் ஆதரவு
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு அந் நாட்டு முஸ்லிம் கட்சிநிபந்தனையுடன் கூடிய ஆதரவை தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் சந்திரிகா குமாரதுங்காவின்மக்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
ஆட்சி அமைக்க அறுதிப் பெரும்பான்மை பலம் தேவை என்ற நிலையில், அக்கூட்டணிக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிக்க அந் நாட்டின் முக்கியமான முஸ்லிம்கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முன் வந்துள்ளது. அக் கட்சிக்குநாடாளுமன்றத்தில் 10 இடங்கள் கிடைத்துள்ளன.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வுகான புதிய சட்டத் திருத்தத்தை தேர்தலுக்கு முன்அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கொண்டு வந்தார். ஆனால், அது நாடாளுமன்றத்தில்நிறைவேற்றப்படவில்லை.
இப்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மீண்டும் வெற்றிபெற்றுள்ளதால், அடுத்த 100 நாட்களுக்குள் புதிய சட்டத் திருத்தத்தைஅமல்படுத்தவேண்டும் என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் இணைத் தலைவர்ராஃப் ஹக்கீம் நிபந்தனை விதித்துள்ளார்.
மேலும் சிறுபான்மை மக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்தல்,காவல்துறை, பொதுப் பணி மற்றும் நீதித் துறை ஆகிவற்றுக்கு தனி கமிஷன்அமைக்கவேண்டும் என்ற நிபந்தனையையும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்விதித்துள்ளது.
நிபந்தனைகள் குறித்து அதிபர் சந்திரிகா குமாரதுங்காவிடம் பேசியுள்ளேன்.நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளேன். அதேநேரத்தில் 100 நாட்களுக்குள் நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால்ஆதரவை வாபஸ் பெறத் தயங்கமாட்டோம் என்று ராஃப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications