சிவாஜி, சரத்திடமிருந்து கடனை வசூலிக்க நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்ற நடிகர்கள் சிவாஜிகணேசன், சரத்குமார்,பாக்கியராஜ், பாண்டியராஜன் போன்றவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க காவல்துறை கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பொருளாதாரக் குற்றத் தடுப்புபிரிவு போலீஸ் ஐ.ஜி. பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

நிதி நிறுவனங்களில் பணம் போட்டு ஏமாந்த டொபாசிட்தாரர்களுடன் சனிக் கிழமைஐ.ஜி. பாலசுப்ரமணியம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நிதி நிறுவனமோசடி வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

டெபாசிட்தாரர்களின் பணத்தை மீட்டுத் தர காவல்துறை மேற்கொண்டுள்ளநடவடிக்கைகளை போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் ஐ.ஜி.பாலசுப்ரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள நடிகர்கள் சிவாஜிகணேசன், சரத்குமார்,பாக்கியராஜ், பாண்டியராஜன் போன்ற நடிகர்களிடம் இருந்து கடன் பாக்கியைவசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

சரத்குமார் ஆர்.பி.எப். நிதி நிறுவனத்தில் ஒரு கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளார்.ஆனால், 10 லட்சத்தை மட்டும் திருப்பித் தந்துள்ளார். மார்ச் மாதத்திற்குள் மீதிப்பணத்தை தந்து விடுவதாக கூறியுள்ளார்.

சிவாஜி கணேசன் 69 லட்சம் திருப்பி செலுத்தியுள்ளார். மீதி 31 லட்சத்தை விரைவில்தருவதாக கூறியுள்ளார். சசிகலா உறவினர் 25 லட்ச ரூபாய் தர வேண்டும்.பாண்டியராஜன் வாங்கிய 6 லட்ச ரூபாய் கடனைை வட்டியுடன் திருப்பிச் செலுத்தவேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+