முடிந்தது விமானக் கடத்தல் நாடகம்: 90 பயணிகள் விடுவிப்பு - 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

கடத்தப்பட்ட சவூதி ஏர்லைன்ஸ் விமானம் மீட்கப்பட்டது. விமானத்திலிருந்த 90பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானத்தை குண்டு வைத்துத்தகர்த்துவிடுவோம் என்று மிரட்டிய கடத்தல்காரர்கள் 4 பேர கைது செய்யப்பட்டனர்.

சவூதி அரேபியா நாட்டின் சவூதி ஏர்லைன்ஸ் நிறுவத்தைச் சேர்ந்த போயிங் 777-200விமானம் சனிக்கிழமை மாலை ஜெட்டாவிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டது.விமானத்தில் 90 பயணிகள் உள்பட 111 பேர் இருந்தனர்.

சவூதி வான் எல்லையை விமானம் கடந்தவுடன், விமானத்தில் இருந்த 4 பேர்திடீரென்று விமானத்தைக் கடத்தினர். முதலில் சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்குவிமானத்தை ஓட்டிச் செல்லும்படி விமானியை அவர்கள் மிரட்டினர்.

ஆனால், டமாஸ்கஸ் விமான நிலையத்தில் விமானத்தை இறக்க சிரியா அரசு அனுமதிமறுத்துவிட்டது. இதையடுத்து விமானத்தை ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு ஓட்டிச்செல்லும்படி கடத்தல்காரர்கள் கூறினர்.

அவர்கள் மிரட்டலுக்குப் பயந்து பாக்தாத் விமான நிலையத்துக்கு விமானத்தைவிமானி ஓட்டிச் சென்று தரையிறக்கினார். பின்னர் விமானத்தை குண்டு வைத்துத்தகர்த்துவிடுவதாக கடத்தல்காரர்கள் மிரட்டினர்.

இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகுவிமானத்தை விட்டு வெளியேறிய கடத்தல்காரர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான கடத்தல்காரர்கள் 4 பேரும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். சவூதிஅரேபிய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விமானத்தைக் கடத்தியதாக அவர்கள்தெரிவித்தனர்.

சவூதி மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான கல்வி போன்ற அடிப்படைஉரிமைகள் கிடைக்கவில்லை. ஆகவே, சவூதி அரேபிய அரசு பதவி விலகவேண்டும்என்று கோரி விமானத்தைக் கடத்தியதாக அவர்கள் கூறினர்.

தற்போது கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே, விமானப் பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே சிறிதுநேரம் தங்கிய பிறகு லண்டன் புறப்பட்டுச் சென்றனர்.

விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்.15 பேர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். சவூதி அரசு குடும்பத்தைச் சேர்ந்தஒருவரும் விமானத்தில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+