பரபரப்பான போட்டியில் மினி உலகக் கோப்பையை வென்றது நியூசி.
நைரோபி:
ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் கோப்பையை நியூசிலாந்து வென்றது.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அந்த அணி 4 விக்கெட்வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது.
நியூசிலாந்து அணியில் கிறிஸ் கெய்ன்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்து தனது அணிக்குவெற்றியைத் தேடித் தந்தார். அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நியூசிலாந்து அணியினர் தங்களுக்கே உரிய நிதானமான ஆட்டத்தினால்கோப்பையைக் கைப்பற்றினர்.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் இந்தியாவை பேட் செய்யும்படி கூறியது. தொடக்கஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய கங்குலி, டெண்டுல்கர் இருவருடைய சிறப்பானஆட்டத்தில் இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்டியது.
கங்குலி சிறப்பாக ஆடி 117 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் அவர் அடித்தஇரண்டாவது சதமாகும் இது. டெண்டுல்கர் தன் பங்குக்கு 69 ரன்கள் எடுத்தார்.
டெண்டுல்கர் 13-வது ரன்னை அடித்தபோது ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்திய அணியில் மற்றவர்கள் யாரும் குறிப்பிடும்படியாக விளையாடவில்லை.இறுதியில் இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.
கங்குலியும், டெண்டுல்கரும் ஆடிய விதத்தைப் பார்த்தபோது இந்தியா நிச்சயம் 300ரன்களுக்கு மேல் எடுக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், டெண்டுல்கரும்,டிராவிட்டும் ரன் அவுட் ஆனது பெரிய ஸ்கோரத் தடுத்து விட்டது. பின்னால் வந்தவீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை.
50 ஓவரில் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தனதுஇன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்கமே அதற்கு பேரிடியாக இருந்தது.
அணியின் ஸ்கோர் 6 ஆக இருந்தபோது தொடக்க ஆட்டக்காரர் ஸ்பியர்மேன்அவுட்டானார். அடுத்து 37 ரன்களில் இரண்டாவது விக்கெட்டும், 82 ரன்னில் 3-வதுவிக்கெட்டும் வீழ்ந்தது.
இந்திய அணியில் டெண்டுல்கர், யுவராஜ் சிங், பிரசாத்ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசிநியூசிலாந்து ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர். இந் நிலையில், 132 ரன்களுக்கு 5விக்கெட்டுகளை இழந்திருந்தது நியூசிலாந்து.
அப்போது கிறிஸ் கெய்ன்ஸும், கிறிஸ் ஹேரிஸும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் 6-வதுவிக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இருவரும் நிதானமாகவும் பதற்றப்படாமலும் ஆடி மெல்லமெல்ல ரன்கள் குவித்தனர்.5 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், வெற்றி இந்தியாவின் பக்கம் இருந்தது. ஆனால்,அந்த வெற்றியை நியூசிலாந்து பக்கம் திருப்பியதற்கு முழுமையான காரணம்கெய்ன்ஸ்தான்.
கடைசி வரை யார் வெற்றிபெறுவார்கள் என்று கணிக்கமுடியாத நிலை இருந்தது. அந்தஅளவுக்கு வெற்றி வாய்ப்பு இரு அணிக்கும் மாறி மாற வந்தது.
இறுதியில் நியூசிலாந்து வெற்றிக் கனியைப் பறித்தது. 49.4 ஓவரில் 6 விக்கெட்இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து நியூசிலாந்து வெற்றி பெற்றது. கெய்ன்ஸ் 102 ரன்கள்எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
இந்திய அணியில் பிரசாத் 3 விக்கெட்டுகளையும், கும்ளே 2 விக்கெட்டுகளையும்,டெண்டுல்கர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியை அடுத்து 2-வது ஐ.சி.சி.நாக் அவுட் கிரிக்கெட் கோப்பையைநியூசிலாந்து பெற்றது. அதற்கு பரிசுத் தொகையாக ரூ. 1 கோடி வழங்கப்பட்டது.நியூசிலாந்து அணி இதுவரை வென்றதிலேயே பெரிய போட்டி இதுதான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே 1998-ம் ஆண்டு டாக்காவில் நடந்த முதல் ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட்கோப்பையை தென் ஆப்பிரிக்கா வென்றது.
ஸ்கோர்:
இந்தியா - 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் (கங்குலி 117, டெண்டுல்கர்69)
நியூசிலாந்து - 49.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் (கெய்ன்ஸ் 102 அவுட்இல்லை, ஹாரிஸ் 46)
ஆட்ட நாயகன்: கெய்ன்ஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications