மே.இ. தீவு அணியில் பிரகாசிப்பாரா ராம்நரேஷ் ஷர்வான்?
மெல்பெர்ன்:
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகிவருகிறார் ராம் நரேஷ் ஷர்வான். இவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பெற்ற இவரது ஆட்டத்தைப் பார்த்து,மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹன் கன்ஹாயைப் போல்எதிர்காலத்தில் பிரகாசிப்பார் என்று பத்திரிக்கைகளும், கிரிக்கெட் வல்லுனர்களும்கருத்துத் தெரிவித்துள்ளனர்.
20 வயதான ஷர்வான் உள்பட மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த 4 வீரர்கள்ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாதெமியில்பயிற்சி பெற்று வருகின்றனர்.
அங்கு அவர்கள் பெறும் பயிற்சியை வைத்தும், ஆடிய பயிற்சி ஆட்டங்களைவைத்தும் எதிர்காலத்தில் ஷர்வான் மிகச் சிறந்த ஆட்டக்காரராக வருவார் என்று பலர்கருத்து தெரிவித்துள்ளனர்.
விரைவில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிவிளையாடவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இந்த வீரர்களை ஆஸ்திரேலியாவில்பயிற்சி பெற மேற்கிந்தியத் தீவுகள் அனுப்பியுள்ளது.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஷர்வானின் மூதாதையர்கள் பல ஆண்டுளுக்குமுன்பே இந்தியாவிலிருந்து வெளியேறி கயானாவில் குடியேறிவிட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கடைசியாக இடம் பெற்றுள்ள இந்தியவம்சாவழியைச் சேர்ந்த வீரர் என்ற பெருமையை ஷர்வான் பெற்றுள்ளார். அவருக்குமுன்பாக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம் பெற்ற ஷிவ்நாராயன் சந்தர்பால்,அந்த அணியில் முக்கிய வீரராகக் கருதப்படுகிறார்.
ஷர்வானைப் போலவே ஆஸ்திரேலியாவுக்குப் பயிற்சி பெற வந்துள்ளவர்களில்டாரென் கங்காவும் ஒருவர். இவரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்தான்.கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர், மேற்கிந்தியத் தீவுகள்அணிக்காக 4 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.
இவர்களைத் தவிர மேலும் பல இந்திய வம்சாவழியைச் சேர்ந்த வீரர்கள் மேற்கிந்தியத்தீவுகள் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செவ்நாராயன் சட்டர்கூன், ஜாஹீர்ரியாஸ் லீ, அனில் பல்லிராம், நார்சிங் தியோநாரீன், சுரூஜ் ரகுநாத் ஆகியோரும்உள்நாட்டுக் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications