ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி: அ.தி.மு.க.வினருக்கு அடி-உதை நிருபர்களுக்கும் கவனிப்பு
கரூர்:
கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த திமுக தலைவர்களில் ஒருவரும்சென்னை மேயருமான ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்டிய அ..தி.மு.க. கவுன்சிலர்மற்றும் தொண்டர்களை தி.மு.க.வினர் கடுமையாகத் தாக்கினர்.
கருர் மாவட்டத்தில் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்யும் போது பஞ்சாயத்துகட்டடங்களை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புவந்தவுடன் உள்ளூர் பஞ்சாயத்து கட்டடங்களை திறக்க அதற்கு சம்பந்தமே இல்லாதசென்னை மேயர் ஸ்டாலின் வரக்கூடாது. அவர் வந்தால் கருப்புக் கொடி காட்டிஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அ.தி.மு.க.வினர் அறிவித்திருந்தனர்.
ஸ்டாலின் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை காலை தனது சுற்றுப்பயனத்ததைதுவங்கினார். 10 மணியளவில் வடசேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுற வுவங்கியின் புதிய கிளையை துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து இடையன்பட்டியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் திறப்பு உட்படபல விழாக்களில் கலந்து கொண்டார்.
இறுதிக்கட்ட நிகழ்ச்சியாக காணியாம்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளி கம்ப்யூட்டர்மையத் துவக்க விழா மாலை 3 மணியளவில் நடந்தது. அது வரை எந்த விதமானஅசம்பாவிதமோ, கருப்புக கொடி ஆர்ப்பாட்டமோ நடக்கவில்லை.
விழா மேடையில் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போது கரூர் மாவட்டபஞ்சாயத்து கவுன்சிலர் என்.எஸ் கிருஷ்ணன் தலைமையில் 10க்கும் மேற்பட்டஅ.தி.மு.க.வினர் ஸ்டாலினுகக் கருப்புக் கொடி காட்டி ஸ்டாலினே திரும்பிப் போ என கோஷமிட்டனர்.
இதையடுத்து கிருஷ்ணராயபுரம் தி.மு.க எம்.எல்.ஏ. நாகரத்தினமும் நூற்றுக்கும்மேற்பட்ட அவருடைய ஆதரவாளர்களும் சேர்ந்து கொண்டு என்.எஸ். கிருஷ்ணனைஉருட்டைக் கட்டையால் தாக்கினர்.
கருப்புக் கொடிகாட்டிய அ.தி.மு.க.வினருக்கும் உருட்டுக் கட்டை அடி விழுந்தது. இந்ததாக்குதலில் அதிமுக கவுன்சிலர் என்.எஸ். கிருஷ்ணன் மண்டை உடைந்து ரத்தம்கொட்டியது.
இதை போட்டோ எடுத்த பத்திரிககை போட்டோகிராபர்களுக்கும் அடி விழுந்தது.காலைக்கதிர் நாளிதழின் போட்டோ கிராபரின் கேமரா சேதமடைந்தது. அதில் இருந்தபிலிம் ரோல்களும் உருவி எடுக்கப்பட்டன.இதைத் தட்டிக் கேட்ட தினமலர் பத்திரிக்கை நிருபர் ஜெய்கணேஷும் தாக்கப்பட்டார்.மற்ற பத்திரிக்கை நிருபர்களையும் திமுகவினர் ஓட ஓட விரட்டி அடித்தனர்.
இந்த சம்பவங்கள் ஸ்டாலின் விழா மேடையிலிருந்து 50 அடி தூரத்தில் நடந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை போலீசார் வழக்கம்போல அமைதியாகபார்த்துக் கொண்டிருந்தனர்.
என்.எஸ் கிருஷ்ணன் குற்றுயிரும், குலையுயிருமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். மேடையில் ஸ்டாலினுடன் மாவட்ட கலெக்டர், தி.மு.க. மாவட்டசெயலாளர், தமிழக அமைச்சர்கள் இருந்த போது இந்த சம்பவம் நடந்தது குறித்துபத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து திங்கட்கிழமையன்று நடக்கவிருக்கும் ஸ்டாலினின் மற்றநிகழ்ச்சிகளிலும் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க.வினர்திட்டமிட்டுள்ளனர்.
முன்பு அதிமுக ஆட்சியில் தான் ஜெ-சசி ஊழல் பற்றி எழுதி வந்ததால் நிருபர்களுக்குஅவ்வப்போது அடி விழுவது வழக்கம். இப்போது திமுகவினரும் அதையேஆரம்பித்துள்ளதால் நிருபர்கள் ரொம்ப தைரியமாகத் தான் கூட்டங்களுக்கு செல்லவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications