ராஜ்குமார் மருமகன் கோவிந்தராஜு மட்டும் விடுதலை
பெங்களூர்:
சந்தன வீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரின் மருமகன்எஸ்.ஏ. கோவிந்தராஜு திங்கள்கிழமை மாலை விடுவிக்கப்பட்டார்.
இரவு 7 மணி அளவில் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில்தென்பட்டதாகவும், அவர், பெங்களூருக்கு வந்து கொண்டிருப்பதாகவும்தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், நக்கீரன் கோபால்ஆகியோரது இறுதி கட்ட முயற்சியில் ராஜ்குமார் விடுவிக்கப்படுவார்என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், அவரது மருமகன் கோவிந்தராஜு மட்டும் விடுதலைசெய்யப்பட்டதாக கடைசியாகக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றபடி ராஜ்குமார் அவருடன் கடத்தப்பட்ட மற்றொருவர் மற்றும் மீட்புநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் பற்றிய மற்ற விவரங்கள் ஏதும்தெரியவில்லை.
விடுவிக்கபப்பட்ட கோவிந்தராஜு தனியாக வருகிறாரா அல்லது மீட்புநடவடிக்கையில் ஈடுப்பட்ட கோபால் அல்லது நெடுமாறனுடன்வருகிறார் என்பது பற்றியும் தகவல் ஏதும் இல்லை.
கோவிந்தராஜு விடுதலை செய்யப்பட்டதை சிறப்பு நடவடிக்கைக் குழுத்தலைவரும் தமிழக கூடுதல் டிஜிபியுமான ஏ.எக்ஸ். அலெக்சாந்தர் உறுதி செய்தார்.விடுவிக்கப்பட்ட கோவிந்தராஜு பெங்களூருக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும்அவர் தெரிவித்தார்.
ராஜ்குமாரையும் அவருடன் கடத்தப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்காமல்கோவிந்தராஜை மட்டும் வீரப்பன் விடுவித்துள்ளார். இப்போது வீரப்பன் பிடியில்ராஜ்குமாரும், நாகேஷ் என்பவரும் உள்ளனர்.
தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அவர்கள் இவருரையும்விடுவிப்பதில்லை என்பதில் வீரப்பன் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications