முரளி கார்த்திக்கின் சூறாவளியில் சுருண்டது மும்பை
மும்பை:
முரளி கார்த்திக்கின் அருமையான சுழற் பந்துவீச்சில், இராணி கோப்பையை ரெஸ்ட்ஆஃப் இந்தியா அணி கைப்பற்றியது.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 10 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
அந்த அணியின் முரளி கார்த்திக், மும்பை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 9விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
முன்னதாக 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என்ற நிலையில் திங்கள்கிழமை காலைமும்பை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
ஆனால், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் முரளி கார்த்திக்கின் சுழற்பந்து வீச்சுக்குமும்பை அணி வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அவுட்டானார்கள். இறுதியில் 56ரன்களை மட்டுமே ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு இலக்காக நிர்ணயித்துவிட்டு 184ரன்களுக்கு மும்பை அணி ஆட்டமிழந்தது.
முரளி கார்த்திக் 70 ரன்களைக் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இப்போட்டியில் அவர் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம்பங்களாதேஷுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்தியஅணியில் இடம் பெறும் வாய்ப்பு அவருக்குப் பிரகாசமடைந்துள்ளது.
அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிவிக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
5 நாள் நடைபெற வேண்டிய இந்த ஆட்டம் 4-வது நாளிலேயே முடிந்துவிட்டதுகுறிப்பிடத்தக்கது.
ஸ்கோர்:
மும்பை: முதல் இன்னிங்ஸ் - 260; இரண்டாவது இன்னிங்ஸ் - 184 (முரளி கார்த்திக்70/9 வி)
ரெஸ்ட் ஆஃப் இந்தியா: முதல் இன்னிங்ஸ் - 389; இரண்டாவது இன்னிங்ஸ் - விக்கெட்இழப்பின்றி 58 ரன்கள்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications