தவணை முறையில் கையெழுத்து வாங்கும் த.மா.கா.
சென்னை:
சென்னையில் திங்கள் கிழமை கவர்னர் பாத்திமா பீவியை சந்தித்து 40 லட்சம்கையெழுத்துக்கள் அடங்கிய மனுவை த.மா.கா. தலைவர் மூப்பனார் அளித்தார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில்மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஒரு கோடி பேரிடம்கையெழுத்துப் பெற்று விலை உயர்வை வாபஸ் பெறக் கோரி கவர்னரை சந்தித்து மனுகொடுப்பது என்று த.மா.கா. தீர்மானித்தது.
அதன்படி மாநிலம் முழுவதும் கையெழுத்து வேட்டையில் த.மா.கா.வினர்ஈடுபட்டனர். முதல் கட்டமாக 40 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
அந்த பட்டியலுடன் திங்கள் கிழமை ராஜ்பவனுக்கு கட்சி நிர்வாகிகள் ஜெயந்திநடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட 20 பேர்களைஅழைத்துக் கொண்டு சென்றார் மூப்பனார். அங்கு கவர்னரை சந்தித்து அந்தபட்டியலுடன் கோரிக்கை மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இரண்டாவது கட்டமாக 60 லட்சம்கையெழுத்துக்கள் பெறப்பட்டு விரைவில் கவர்னரிடம் வழங்கப்படும். மத்திய அரசுஇந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.
நிர்வாகச் செலவுகளை குறைப்பதன் மூலம், பல்வேறு அமைச்சகங்களுக்கு ஆகும்செலவை குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை மத்திய அரசு கைவிட முடியும்.அதைச் செய்யாமல் சாதாரண ஏழை மக்கள் தலையில் கையை வைப்பது கடுமையாககண்டிக்கத்தக்கது என்றார் மூப்பனார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications