வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து போராட தொழிலாளர் சங்கங்கள் திட்டம்
ஈரோடு:
பாங்க்குகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்து நாடு முழுவதும் வங்கிகள் போராட்டத்தில் இறங்கஉள்ளன.
ஈரோட்டில் நடந்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க மாநாட்டில், இதன் தலைவர் எம்.எஸ்.என். ராவ் பேசியதாவது:
மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விற்பனை மூலம்வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது
இதனால், முன்னுரிமைத் தொழில்களாக அறிவிக்கப்பட்டுள்ள விவசாயம், சிறு தொழில் ஆகியவற்றிற்கு வங்கிகள் வழங்கிவரும் கடன் குறையும். இந்த இரு பிரிவுத் தொழில்களுக்கும் 40 சதவீதக் கடன்கள் வழங்க வேண்டும் என அரசுஅறிவித்துள்ளது. ஆனால், தனியார்மயமானால் இவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க முன் வராது. இதனால்விவசாயமும், சிறுதொழிலும் நசியும்.
பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம், வங்கிகளின் நிர்வாகத்தில் தொழிலதிபர்கள் நுழைய வாய்ப்புஏற்படும். மேலும் வெளிநாட்டினரின் ஆதிக்கம் அதிகரிக்கும். எனவே, இத்தயை ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் கடன்கள் நிறுத்தப்பட்டு விடும். நாட்டில் இந்த இருதொழில்களும் நசிவடையும்போது நடுத்தர மக்கள் மற்றும் சிறுதொழில் அதிபர்கள் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
ஏழைகளுக்கு கடன் வழங்கும் வாய்ப்பு குறைந்து போகும். தாழ்த்தப்பட்ட- பழங்குடியின மக்களுக்கு குறைந்த வட்டியில்அரசு வழங்கி வந்த கடன் நிறுத்தப்படும்போது இவர்கள் பெருமளவிற்கு பாதிக்கப்படுவர்.
வெளிநாட்டில் உள்ள பெரும் கம்பெனிகள் இந்திய வங்கித் துறையில் நுழையும்போது பொருளாதாரம் வீணாகும்.
வசூலாகாமல் உள்ள 58 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வசூல் செய்ய எவ்வித நடவடிக்கையும் மத்திய அரசுமேற்கொள்ளவில்லை. பெரும் தொழிலதிபர்களிடம் வசூல் செய்வதை அரசு தவிர்த்து வருகிறது.
இதனால் அரசியல் ஆதயம் தேடப்படுகிறது. மேலும், ஆள்குறைப்பு மூலம் தொழிலாளர்களைக் வலுக்கட்டாயமாக ஓய்வுபெறச் செய்தும் வருகிறது மத்திய அரசு என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications