தாய்க்கு புற்றுநோய் .. தாயுடன் சேர்ந்து 2 மகன்கள் தற்கொலை
கோவை:
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய் இறந்துபோவதை பொறுக்க முடியாத இரண்டுமகன்கள் உட்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்பூர் அருகே உள்ள அங்கேரிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரதுமனைவி அமிர்தம் (60). இவருக்கு சீனிவாசன் (35), சண்முகம் (32) இரண்டு மகன்கள்இருந்தனர்.
அமிர்தம் கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காகபல இடங்களில் மருத்துவத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், புற்று நோய் மிகவும்முற்றிய நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறி விட்டனர்.
மேலும் இன்னும் சில நாட்கள் மட்டுமே அமிர்தத்தால் உயிர் வாழ முடியும் எனடாக்டர்கள் கை விரித்து விட்டனர். எனவே தாயின் மரணம், இரண்டு மகன்களையும்வருத்தியது.
தாயின் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாது என தீர்மானித்த இரண்டு பேரும்தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் இருவரின் முடிவையும்அறிந்து கொண்ட அமிர்தம் கதறி அழுதார்.
ஆனால் இரு மகன்களும் முடிவை மாற்றிக் கொள்ளாததால் அமிர்தமும் தற்கொலைசெய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து மூன்று பேரும் சேர்ந்து விஷம்குடித்தனர்.
மூவரும் விஷம் குடித்து விட்டு வீட்டிற்குள்ளேயே இறந்து விட்டனர். இது வெளியில்யாருக்கும் தெரியவில்லை. இரண்டு நாட்களாக நடமாட்டம் இல்லாத நிலையில்வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதை அருகில் இருந்த மக்கள்அறிந்தனர்.இதையடுத்து கதவைத் திறந்து பார்த்தனர்.
அப்போது 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications