தமிழகத்தில் இனி மின் தடையே இருக்காது
சென்னை:
கூடுதலாக 850 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதால் தமிழ்நாட்டில் இனிமேல் மின்தடை என்பதே இருக்காது என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடுவீராச்சாமி தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
எண்ணூரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 100 மெகாவாட் மின்சாரம்தற்போது கிடைத்து வருகிறது. வருகிற டிசம்பருக்குள் அங்கு 200 மெகாவாட்கூடுதலாக உற்பத்தியாகும்.
பிள்ளைபெருமாள்நல்லூரில் 330 மெகாவாட் மின்சாரம் மார்ச் மாதத்திற்குள்கிடைக்கும். தர்மபுரி சாமல்பட்டியில் 106 மெகாவாட் மின்சாரம் கிடைக்க உள்ளது.
நமக்கு ஆண்டுதோறும் 300 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக இருந்துவருகிறது. அதற்கும் கூடுதலாக மின்சாரம் கிடைக்கவிருப்பதாலும், தமிழகம்முழுவதும் அணைகள் நிரம்பி நீர்மின் உற்பத்திக்கு அதிக வாய்ப்பு இருப்பதாலும்இந்த ஆண்டில் மின் தடை, மின் வெட்டு இருக்காது.
அது மட்டுமின்றி அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் விவசாயிகளுக்கு மே, ஜூன்,ஜூலை மாதங்களில் காலை 4 மணி நேரம், இரவு 8 மணி நேரம் மின்சாரம்வழங்கப்படுவதற்கு மாறாக, எப்போதும் போல் பகலில் 6 மணி நேரம், இரவு 8 மணிநேரம் தொடர்ந்து மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்ற பிறகு இப்போது தான் தமிழக விவசாயிகள் இந்த சலுகையைஅனுபவிக்கிறார்கள். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்துவழங்கப்படுகிறது. 16 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதினாலும்,லைன் லாஸ் ஏற்படுவதாலும் ஆண்டுக்கு ரூ.2000 கோடி மின்வாரியத்திற்கு இழப்புஏற்படுகிறது.
உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 27 சதவீதம் விவசாயிகளுக்குஇலவசமாக வழங்கப்படுகிறது. லைன் லாஸ் மூலம் 16.9 சதவீதம் வீணாகிறது என்றார்அமைச்சர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications