தயாராகிறது பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் பற்றிய வெள்ளை அறிக்கை
டெல்லி:
பெரிய தொழிற்சாலைகள், பொதுத் துறை நிறுவனங்கள் பற்றிய வெள்ளை அறிக்கைதயாரிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய பெரிய தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்று வரும் பொருளாதார ஆசிரியர்களுக்கான மாநாட்டில் அவர்செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
பெரிய தொழிற்சாலைகள், பொதுத் துறை நிறுவனங்கள் துறையின் கீழ் நாடுமுழுவதும் பல பெரிய தொழிற்சாலைகளும், பொதுத் துறை நிறுவனங்களும்செயல்பட்டு வருகின்றன.
நலிவடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களை மீண்டும் லாபகரமாக இயங்கவைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காகவே வெள்ளைஅறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
பெரிய தொழிற்சாலைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறையின் கீழ் உள்ள48 பொதுத் துறை நிறுவனங்களில் 13 நிறுவனங்கள் 1999-2000-ம் ஆண்டில்நஷ்டத்தைச் சந்தித்தன.
நலிவடைந்த நிறுவங்களைத் தூக்கி நிறுத்த பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களின் கீழ்அந்த 13-ல் 12 நிறுவனங்களில் இப்போது அதிக நிதியை மத்திய அரசு முதலீடுசெய்துள்ளது. மொத்தம் 637 கோடி ரூபாய் அவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 2063 கோடி ரூபாய் அளவுக்கு அந் நிறுவனங்களின் நிதி மறுகட்டமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் மேற்கண்ட நிறுவனங்களில்பணிபுரியும் 40 ஆயிரம் பேர் பயனடைவார்கள்.
நஷ்டத்தில் இயங்கி வரும் ஹெச்.எம்.டி. நிறுவனத்தை மீண்டும் லாபகராக இயங்கவைக்கும் திட்டத்தின் கீழ் அந் நிறுவனத்தில் கூடுதலாக ரூ.275 கோடியை மத்திய அரசுமுதலீடு செய்துள்ளது என்றார் முரளி மனோகர் ஜோஷி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications