ராஜ்குமார் குடும்பத்தினர் டெல்லி செல்கின்றனர்
பெங்களூர்:
மனிதாபிமான அடிப்படையில் ராஜ்குமாரை விடுவிக்க முயற்சி எடுக்க வேண்டும் எனஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரை சந்தித்துவேண்டுகோள் விடுக்க ராஜ்குமார் குடும்பத்தினரும், கன்னட திரைப்படத்துறையினரும் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 80நாட்கள் ஆகிவிட்டன. அரசு தூதர் அவரை விடுவிக்க ஐந்து முறை காட்டுக்கு சென்றுவந்துவிட்டார். ஆனால் ராஜ்குமார் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்தித்து பேசுவதாக ராஜ்குமார்குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். அவர்களை அலுவலகத்தில் சந்தித்து பேசுவதற்குநேரம் ஒதுக்குவதற்கான
ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
இந்தக குழுவில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.இதற்காக சிறப்பு ரயிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடக திரைப்பட வர்த்தகசபைத் தலைவர் சந்திரசேகர், ராஜ்குமார் ரசிகர் சங்கத் தலைவர் கோவிந்த்,இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், எம்.பி.க்கள் அம்பரீஷ், சசிகுமார், நடிகர் நடிகைகள்இந்தக் குழுவில் கலந்து கொள்வார்கள்.
டெல்லி செல்வது எப்போது என்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் .டில்லி செல்லவிருப்பதாக உள்ள தகவலை ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் உறுதிசெய்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications