முதல்வர் நல நிதிக்கு ரூ. 29 லட்சம் குவிந்தது
சென்னை:
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 29 லட்சம் குவிந்துள்ளது.
இதுகுறித்து அரசு வியாழக் கிழமை வெளியிட்ட அறிக்கை:
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழிலதிபர்களும், வணிக பெருமக்களும்,செல்வந்தர்களும் ஏனைய ஆர்வமுடையோரும் தாரளமாக நிதியை வாரி வழங்கிடவேண்டுமாய் அண்மையில் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி வியாழக் கிழமை தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் மகனும்,செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமானஎம்.ஏ.எம்.ஆர்.முத்தையா 5 லட்ச ரூபாய்க்கான காசோலையையும், தொழிலதிபர்எம்.பி.டிஸ்லரீஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.பி.புருஷோத்தமன் 5 லட்ச ரூபாய்க்கானகாசோலையையும் முதல்வரை சந்தித்து வழங்கினர்.
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்களால் கடந்த 16ம் தேதிவழங்கப்பட்ட 19 லட்சத்தையும் சேர்த்து, முதல்வரின் பொது நிவாரண நிதிக்குஇதுவரை 29 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications