கரூர் அதிமுக எம்.பி. தேர்தலை எதிர்த்து வழக்கு
சென்னை:
கரூர் லோக்சபா தொகுதி தேர்தலில் அ.தி.மு.க எம்.பி சின்னசாமி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைவிசாரணைக்கு ஏற்று, அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.
கரூரைச் சேர்ந்த திலகர் என்பவர் சென்னை உ.யர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சின்ன சாமி, தனக்கு அடுத்த வந்த தி.மு.க வேட்பாளர் பழனிச்சாமியை விட கூடுதலாக இரண்டாயிரத்து847 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மோசடி நடந்துள்ளது. சின்னசாமி மீது ஊழல் வழக்கு உள்ளது. தேர்தலின் போது வரம்பு மீறி சின்னசாமி செலவு செய்துள்ளார். பலஒட்டுச்சாவடிகளில் ஆள் மாறாட்டம் நடந்துள்ளது. சில இடங்களில் ஒட்டுச்சாவடிகளை கைப்பற்றியுள்ளனர்.
தி.மு.க வேட்பாளர் பழனிச்சாமிக்கு கிடைத்தஒட்டுக்களை சின்னசாமிக்கு விழுந்த ஒட்டுக்களோடு சேர்த்து எண்ணப்பட்டுள்ளது. ஒட்டு எண்ணிக்கையில்முறைகேடு நடந்துள்ளது.
எனவே, கரூர் தொகுதியில் பதிவான ஓட்டுக்களை மீண்டும் எண்ண உத்திரவிடவேண்டும். சின்னசாமி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருப்பன் ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ராமமூர்த்தி, மனுவுக்கு பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்திரவிட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications