தடா கைதிகள் வழக்கு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு-ராஜ்குமார் விடுதலை மேலும் தாமதமாகும்
டெல்லி:
மைசூர் தமிழ் தடா கைதிகள் விடுதலை வழக்கை உச்ச நீதிமன்றம் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டது.
முன்னதாக மைசூர் சிறையில் உள்ள தடா கைதிகளை விடுவிக்கும் எண்ணம் ஏதும் எங்களுக்கு இல்லை எனவும்உச்ச நீதிமன்றம் கூறியது.
ராஜ்குமாருக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழகமும், கர்நாடகமும் தான் பொறுப்பு என்றும், வீரப்பனைப் பிடிக்கத்தவறிய இந்த இரு மாநிலங்களும் தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
வீரப்பனின் கோரிக்கையான மைசூர் தடா கைதிகளை விடுவிப்பது குறித்த வழக்கு விசாரணை மூன்றாவது நாளாகதொடர்ந்து வியாழக்கிழமை நடந்தது. செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை நடந்த விசாரணையின்போதுதமிழகத்தையும் கர்நாடகத்தையும் மிகக் கடுமையாக கண்டித்தது நீதிமன்றம்.
வியாழக்கிழமை நடந்த விசாரணையில் நீதிபதிகள் கூறுகையில்,
இரு மாநிலங்களின் அலட்சியத்தால் தான் ராஜ்குமார் கடத்தரப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தேபயத்தில் தான் இரு மாநிலங்களும் செயல்பட்டன. ராஜ்குமாருக்கு ஏதாவது நேர்ந்தால் கர்நாடகத்தில் உள்ளதமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறித் தான் தடா நீதிமன்றத்திடம் கைதிகளை விடுவிக்கும் உத்தரவைகர்நாடக அரசு வாங்கியது.
தடா சிறப்பு நீதிமன்றத்தின் அந்த உத்தரவு மிக பயங்கரமானது. அது பயத்தின் அடிப்படையில் பெறப்பட்டஉத்தரவு.
10 ஆண்டுகளாக இரு மாநிலங்களும் வீரப்பனைப் பிடிக்க எந்த முயற்சியும் எடுக்காததால் தான் இப்போது இந்தவிபரீத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, ராஜ்குமாருக்கு ஏதாவது நேர்ந்தாலும் இந்த இரு மாநிலங்கள் தான்பொறுப்பு.
தமிழக அரசுக்கு கண்டனம்:
தமிழக காட்டு எல்லைப் பகுதியான காஜனூரில் இருந்து தான் ராஜ்குமார் கடத்தப்பட்டார். அவரை வீரப்பன்கடத்துவதற்கு வாய்ப்புள்ளது என்று முன்பே தெரிந்திருந்தும் அவருக்கு பாதுகாப்புத் தர தமிழகம் தவறிவிட்டது.
ராஜ்குமார் தங்கியிருந்த இடத்தில் சில போலீஸ்காரர்களை நிறுத்துவதில் தமிழக அரசு என்ன பிரச்சனை இருந்ததுஎன்றார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான் வழக்கறிஞர் ரெட்டி கூறுகையில், ராஜ்குமாருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியதேவை இதற்கு முன் இருந்ததில்லை. மேலும், ராஜ்குமார் கடத்தப்பட்ட அன்று அந்தப் பகுதி போலீசார் நீலகிரிக்குவிரைந்திருந்தனர். அங்கு தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்ததால் போலீசார் அங்குசென்றுவிட்டனர் என்றார்.
தடா கைதிகளை விடுவித்தால் ராஜ்குமாரை வீரப்பன் விட்டுவிடுவான் என்று நீதிபதிகள் மீண்டும் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த தமிழக வழக்கறிஞர், இதற்காகத் தான் வீரப்பனுடன் பேச்சே நடத்தி வருகிறோம். தடாகைதிகளையும், ராஜ்குமாரையும் ஒரே நேரத்தில் விடுவிக்கச் செய்யும் வகையில் திட்டம் தீட்டலாம் என்றார்.
அதைத் தான் எப்படி செய்யப் போகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர்.
ராஜ்குமாரை விடுவிப்பதற்காக மைசூர் சிறை மற்றும தமிழக சிறைகளில் உள்ள தடா கைதிகளை விடுவிக்க தமிழக,கர்நாடக அரசுகளும், தடா நீதிமன்றங்களும் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டன.
இதன்மூலம் சட்டத்தை இரு மாநிலங்களும் ஏமாற்றிவிட்டன என்றனர். ஏதோ பொது சேவை செய்வதாகநினைத்துக் கொண்டு இரு மாநிலங்களும் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டன என்று கடுமையாகநீதிபதிகள் கூறினர்.
பின்னர் வழக்கை இம்மாதம் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
தடா கைதிகளை விடுவித்தால் ராஜ்குமாரை வீரப்பன் கட்டாயம் விடுவிப்பானா?வீரப்பன்-விடுதலைப் புலிகள் தொடர்பு: உச்ச நீதிமன்றம் கவலை
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications