அமெரிக்காவுக்குத் தலைவணங்காத வாஜ்பாய் .. ஆர்.எஸ்.எஸ். புகழாரம்
கோடா:
அமெரிக்காவுக்குத் தலைவணங்காத முதல் இந்தியப் பிரதமர்வாஜ்பாய்தான் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கே.எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.
கோடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுசிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகள்எல்லாம் ஒற்றுமையாக இருந்து மீதமுள்ள 4 ஆண்டு ஆட்சியையும்சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்.
கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல எதிர்க்கட்சிகளின் பலஎதிர்ப்புகளையும், நிர்பந்தங்களையும் சகித்துக் கொண்டு அனைத்தும்சமாளித்து ஆட்சி நடத்தி வருபவர் வாஜ்பாய்.
அமெரிக்காவுடன் பல துறைகளில் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு இந்தியா மீதுபல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.
இருந்தாலும், அமெரிக்காவிடம் இந்தியா பணிந்து விடவில்லை.அமெரிக்காவுக்குத் தலைவணங்காத முதல் இந்தியப் பிரதமர்வாஜ்பாய்தான்.
உலகின் மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் இந்தியா வந்தபோது அவரிடம்பல மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்யும்படிபிச்சை கேட்டுள்ளனர். இது வெட்கக்கேடான விஷயமாகும்.
தேசிய நீரோட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையாகச்செயல்படவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்கொள்கை. இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ யாராகஇருந்தாலும், இந்தியர் என்ற ஒரே கொள்கையை மனதில் கொண்டுஒற்றுமையாக வாழவேண்டும் என்றார் சுதர்சன்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications