வீரப்பன் காட்டில் வாலிபர் பிணம் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்:

வீரப்பன் ராஜாங்கம் நடத்தி வரும் சத்தியமங்கலம் காட்டில் 35 வயது மதிக்கத்தக்கவாலிபரின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவரின் சாவுக்குப் பின்னணியில்வீரப்பன் இருக்கலாமா என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

வீரப்பன் நடமாட்டம் உள்ள சத்தியமங்கமலம் காட்டுப்பகுதியில் 35 வயதுமதிக்கத்தக்க ஒருவருடைய பினத்தை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். சத்தியமங்கம்ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் ரோட்டிலிருந்து 100 அடி தூரத்தில் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் வெள்ளை நிற பாண்ட்டும், சட்டையும் அணிந்திருந்தார்.இவர் உடல் அருகில்கண்ணாடியும், ஊசி போட பயன்படும் சிரிஞ்சும் இருந்தது. இடது கையில் வெள்ளிமோதிரமும். வலது கையில் மண்டை ஓடு சின்னம் பொறித்த மோதிரமும்அணிந்திருந்தார்.

அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. ராஜ்குமாரை அவர் பார்க்கப்போனாரா, வக்கீலா?அல்லது பத்திரிக்கையாளரா? சிரிஞ்ச் இருப்பதால் விஷ ஊசிபோட்டு இறந்தாரா என்பது தெரியவில்லை.

இது குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+