தினகரன் எம்.பி. தேர்வு செல்லாது ..நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
அதிமுகவின் "அடுத்த வாரிசு தினகரன், பெரியகுளம் மக்களவைத் தொகுதியில்வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தினகரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் அக்காமகன் தினகரன். இவர் கடந்த லோக்சபா தேர்தலில் பெரியகுளம் தொகுதியில்போட்டியிட்டு வென்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் செல்வேந்திரன்போட்டியிட்டார்.
தினகரனுக்கு 3 லட்சத்து 3 ஆயிரத்து 881 ஓட்டுக்களும், செல்வேந்திரனுக்கு 2 லட்சத்து2 ஆயிரத்து 58 ஆயிரத்து 75 ஓட்டுக்களும் கிடைத்தன. இந்நலையில் திமுகவேட்பாளர் செல்வேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் வெற்றியைஎதிர்த்து மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 1999ம் ஆண்டு 4 கோடி ரூபாய் கொடுத்து தினகரன் சிங்கப்பூர்குடியுரிமை பெற்றிருக்கிறார். சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் மற்றும் அடையாளஅட்டை பெற்றுள்ளார். அது தொடர்பான சான்றுகளை நீதிமன்றத்தில்சமர்ப்பித்துள்ளேன்.
வெளிநாட்டு பிரஜையான ஒருவர் இந்திய அரசியல் சட்டம் 102(1)(டி) பிரிவின் கீழ்நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தல் அதிகாரி அவருடையவேட்புமனுவை நிராகரித்திருக்க வேண்டும். ஆனால், அவர் நிராகரிக்கவில்லை.
மேலும் தினகரன் மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்குத் தொடரப்பட்டு ரூ.31கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(1)(ஈ)பிரிவுப்படி தண்டிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாது.
எனவே அவருடைய தேர்தலை ரத்து செய்து செல்வேந்திரன் வெற்றி பெற்றதாகஅறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி சொக்கலிங்கம், தினகரனுக்கு 6 வாரகால அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications