செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி. தேர்வை எதிர்த்து வழக்கு
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் செஞ்சி ராமச்சந்திரன் வெற்றி பெற்றது செல்லாது எனமுன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கைவியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி விசாரணைக்கு ஏற்று செஞ்சிராமச்சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.
திண்டிவனம் பாரளுமன்ற தேர்தலில் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்(ம.தி.மு.க.) திண்டிவனம் ராமமூர்த்தியை (காங்கிரஸ்) எதிர்த்து போட்டியிட்டு 9,350வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரது வெற்றி செல்லாது எனக் கூறி திண்டிவனம் ராமமூர்த்தி கடந்த நவம்பர்சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அவர் தன் மனுவில்கூறியிருந்ததாவது:
தேர்தல் நடந்த நாளன்றும் அதற்கு முன்பும், வாக்குகள் எண்ணப்பட்ட போதும் பலமுறைகேடுகள் நடைபெற்றன. தேர்தல் விதிக்கு புறம்பாக செஞ்சி ராமச்சந்திரனும்,அவரது ஆட்களும் செயல்பட்டனர். பலர் கள்ள ஒட்டு போட்டனர்.
எனக்கு சாதமாக அளிக்கப்பட்ட வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனக்குஅளிக்கப்பட்ட வாக்குகள் செஞ்சி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக எண்ணப்பட்டன.எனவே அவர் வென்றாது செல்லாது. நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்என கூறியிருந்தார்.
இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. திண்டிவனம் ராமமூர்த்தி சார்பாகஆஜரான பெண் வக்கீல் விஜயதரணியின் வாதத்திற்கு பின் நீதிபதி நாகப்பன் வழக்கைவிசாரணைக்கு அனுமதித்தார்.
இது குறித்து 6 வாரங்களுக்குள் பதில் தரவேண்டும் என செஞ்சி ராமச்சந்திரன் மற்றும்தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவுபிறப்பித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications