முட்டுக்கட்டை இருந்தும் முன்னேற்றத்தில் தெற்காசிய பெண்கள்
இஸ்லாமாபாத்:
தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைப்பதில் பெரும்முட்டுக்கட்டை இருந்தாலும் கூட அதையும் மீறி அவர்கள் சமூகத்தில் முன்னேறிவருவதாக ஐ.நா. ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகைக் கழகத்தின் தலைவர் டாக்டர் நபீஸ் சாதிக்இந்த அறிக்கையை வெளியிட்டார்.
உலகிலேயே பெண்கள் மோசமாக நடத்தப்படுவாதக் கூறப்படும் தெற்காசியாவில்,பெண்கள் சமூக அளவில் வெகுவாக முன்னேறி வருகிறார்கள். தலைமைப் பொறுப்பில்இந்த நாடுகளில் அதிக அளவில் பெண்கள் உள்ளனர்.
அங்குள்ள பெண்களின் நிலை கல்வி மற்றும் பல துறைகளிலும் அவர்களுக்குஅளிக்கப்படும் வசதிகளும் வாய்ப்புகளும் ஆண்களுக்கு அளிக்கப்படுவதை விடகுறைவாகவே உள்ளன.
உலக பெண்கள் மக்கள் தொகையில் 21 சதவிகித பெண்கள் தெற்கு ஆசியாவில்வசிக்கிறார்கள். மேலும் உலகில் படிப்பறிவில்லாத பெண்களில் 44 சதவிகிதபெண்களும் இந்த பகுதியிலேயே வசிக்கிறார்கள்.
தெற்கு ஆசியாவின் நான்கு நாடுகளில் பெண்கள் தலைமைப் பொறுப்பில்இருந்துள்ளனர். இந்தியாவில் இந்திரா காந்தியும், பெனாசிர் புட்டோ பாகிஸ்தானிலும்பிரதமர்களாக இருந்துள்ளனர். கலிதா ஜியா வங்க தேச அதிபராக இருந்துள்ளார்.தற்போது ஷேக் ஹசீனா அதிபராக இருக்கிறார். இலங்கையின் அதிபராக சந்திரிகாகுமாரதுங்கா இருக்கிறார்.
தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானில்தான் மிகவும் மோசமான நிலையில் பெண்கள்உள்ளனர். தெற்கு சிந்து மாகாணத்தின் பல பகுதிகளில் பெண்கள் இறந்த பின்னும் கூடஅவர்களது உடலை, இருட்டிய பிறகே கல்லறைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.ஏனென்றால் அவர்கள் பர்தா அணிந்து வாழ்ந்து வந்தவர்கள். அதனால் இறந்த பிறகும்அவர்கள் முகத்தை யாரும் பார்க்கக் கூடாது என்பதால் இந்த வழக்கத்தைக்கடைப்பிடிக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் முஸ்லிம் பெண்கள் படிப்பதற்கு அனுமதியில்லை. மாலத்தீவில் 51சதவீத பெண்கள் 5 வயதை அடையும் முன்னரே இறந்து விடுகின்றனர்.
இது தவிர பெண்களுக்கான அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.ஆண்களோடு ஒப்பிடும் போது பெண்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் குறைவாகவேஉள்ளது. சமுதாயத்திலும் பெண்களுக்கான அங்கீகாரம் குறைவாகவே உள்ளது.
பெண்களுக்கு தேவையான வாய்ப்புகள் அளிக்கப்படாவிட்டால் பெண்கள்முன்னேற்றமே ஏற்படாது என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
சென்ற வருட அறிக்கை தெற்கு ஆசியாவிலுள்ள பெண்களின் கல்வித்தரம்,ஏழ்மைநிலை பற்றி ஆய்வு செய்திருந்தது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications